தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

வியாழன், 2 ஏப்ரல், 2020

கொரோனா- பாடம்

கொரோனா கொடுத்திருக்கும்  பாதிப்புகள்,  எச்சரிக்கைகள் என ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சரியமானது

ஆம் பெரும் எச்சரிக்கையினை உலகுக்குச் சொல்கின்றது

1950க்கு பின் வேகமாக மாறிய உலகமிது அதுவும் 1990க்கு பின் பணமே பிரதானம் என்றாயிற்று, எப்படியும் சம்பாதி, சம்பாதித்து கொண்டாடு என்ற அளவு நிலமை மாறியது

குறிப்பாக இத்தலைமுறைக்கு பந்தபாசம், பக்தி , ஞானசிந்தனை என எதுவுமில்லை. அவர்களின் சிந்தனையும், மனமும், குணமும், பார்வையும் தேடலும் பணம், பணம், கொண்டாட்டம் என்ற நோக்கிலே இருக்கிறது

உலகில் உள்ள உணவு முதல் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற வெறியோடு இயங்கியது உலகம்,
அது பாசத்தை மறந்தது, கடமையினை மறந்தது, கடவுளை மறந்தது, பணம் எல்லாவற்றையும் காக்கும் என நம்பியது

பார்கள் நிரம்பி வழிந்தன ,, தியேட்டர்கள் நாளை காலை படம் பார்க்க இன்றே வரிசையில் நின்றார்கள்,, கேளிக்கை விடுதிகள் விடுமுறையில்லாமல் இயங்கின.. மஜாஜ் சென்டர் புல் பிசி ,, நடிகர்கள் நான் சொல்வது தான் மக்கள் கேக்கணும் என்று ஆணவத்துடன் இருந்தார்கள்

அப்படி இருந்த உலகின் இன்றைய நிலை

இதோ மாநகரங்களின் இன்னொரு பக்கம்

ஆம், பப்கள் என இரவெல்லாம் குடியும் ஆட்டமும், பாட்டமுமான மையங்கள் காலியாய் கிடக்கின்றன,

மசாஜ் சென்டர் என்ற பெயரில் என்னவெல்லாமோ செய்த மையம் மூடி கிடக்கின்றது

மது குடி மையங்கள் மூடிக்கிடக்கின்றன,
மது ஆலைகள் சானிட்டைசர் தயாரிக்கின்றன‌

இளம் தலைமுறையிடம் பெரும் கலாச்சார சீர்கேட்டை விளைவித்த தமிழக திரையுலகம் மூடிக் கிடக்கின்றது, தாங்கள் கடவுளுக்கு நிகர் என கருதிய நட்சத்திரங்கள் மல்லாக்க கிடக்கின்றனர்

அவர்களை ஆட்டி வைத்த சக்திகள் அஞ்சி ஒடுங்கி இருக்கின்றன‌

அட குடிக்கவில்லை என்றால் சாகமாட்டோமா என சிந்திக்கின்றது குடிகார தலைமுறை

பியூட்டி பார்லர் செல்லாமல் மேக் அப் செய்யாமல் வாழமுடியுமா? அது சாத்தியமா அட ஆமாம் ஆமாம் என ஒப்புக்கொள்கின்றது மங்கையர் இனம்

பணம் , பணம் என ஓடிய தாயும் தந்தையும் அருகிருக்க கண்டு மகிழ்கின்றது
மழலைக் கூட்டம்,

நெடுநாளைக்கு பின் தன் மக்கள் நலம் விசாரித்து ஊட்டிவிடுவதில் கண்ணீர் விடுகின்றது முதியோர் கூட்டம்

பாவகாரியங்கள் விலக்கப்படுகின்றன., பாவத்தின் கொண்டாட்ட மையங்கள் மூடப்படுகின்றன‌

தொழிற்சாலை இயக்கமில்லை, விமானமும் ரயிலும் இயக்கமில்லை என்பதால் காற்றின் தரம் உயர்ந்தாயிற்று

அண்டார்டிக்கா பனிப்பாறைகளுக்கு புது இறுக்கம் கிடைத்தாயிற்று

ஆட்டமும், பாட்டமுமாய் நான் காண்பதே உலகம், தெய்வம் எனக்கு கைகட்டி வழிவிடும் என சவால் விட்டவனை எல்லாம் அஞ்சி ஒடுங்கி துப்பாக்கி முனையில் அமர வைத்து விட்டது காலம்

தனித்திருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஞானம் பிறக்கின்றது

உணவு முதல் தொழில்வரை தன் பாரம்பரியத்தை நினைத்து பார்க்கின்றான்,
எவ்வளவு தூரம் விலகிவிட்டோம் என்பதை உணர்கின்றான், உண்மையில் எது தேவை என்பது அவனுக்கு தெரிகின்றது

கொரோனாவினை அனுப்பிய சக்தி அதில் சிரிக்கின்றது

தன் திட்டம்/ கனவு/ வேகம்/ ஆசை/ எதிர்பார்ப்பு எல்லாம் கண்முன் உடைந்து அதெல்லாம் வெறும் மாயை என உணர்ந்து அடங்கி இருக்கின்றான் மனிதன்

பிரமாண்ட இயற்கை முன்னால் தான் தூசு என்பதும், நீர்குமிழி வாழ்வு எப்பொழுதும் உடையும் என்பதும் மானிடனுக்கு புரிகின்றது

தமிழகம் முருகப் பெருமானையும், அம்மனையும் ஒவ்வொரு வீட்டிலும் வணங்குகின்றது

ஐரோப்பாவோ எல்லாம் கோவில்களை காலியாக்கிய பாவம் என கண்களை துடைத்து ஆலயம் திறக்கும் நாளை எதிர்பார்கின்றது.கிறிஸ்தவ வீட்டில் பைபிள் வாசிப்பும்,மேரி மாதா ஜெபமணி ஜெபிக்கின்றனர்.இஸ்லாமிய வீட்டில் குரான் ஓதப்படுகின்றது.

சிரிய துருக்கி போர், சவுதி ஏமன் போர் கூட நின்றிருக்கின்றது,

காலமோ இயற்கையோ கடவுளோ அனுப்பிய கொரோனா மானிட சமூகத்துக்கு ஞானத்தின் எச்சரிக்கை. காலம். நினைத்திருந்தால் இதை விட கொடிய நோய் அனுப்பி மானிட சமூகத்தைச் சரித்து போட சில நாழிகை ஆகியிருக்காது

ஆனால் எச்சரிக்கின்றது, ஆம் இது எச்சரிக்கை, மானிட இனத்தை மெல்ல எச்சரிக்கின்றது காலம்

அதில் மெல்ல ஞானம் பெற்றுக் கொண்டிருக்கின்றான் மனிதன், அந்த ஞானம் நிலைக்காவிட்டால் மறுபடி இதைவிட வலுவாக காலத்துக்குத் தெரியாதா என்ன?

Whose Father is He?

A beggar came asking for food. I told him to come from back door, asked him to sit on floor. I brought food & said, "we shall pray. Repeat after me, Our Father in heaven". "Your Father in heaven" he said."No,our Father..." said me. "Your Father...." said he. Irritated, I asked why u say 'your' father when I say 'Our Father?' He said "sir, it's like this. If I say Our Father, then we both become brothers. If we r brothers, u would invite me from the front door and not from back :u would ask me to sit at ur dining table & would chat like brothers. Sir, somehow it's not possible. So he may be ur Father, but he can't be OUR FATHER.
Whose Father is He?
My?.. Your..? Her...? His...? Their...?
  Or Our Father...?
It took a beggar to teach me The truth!!!
....

சனி, 9 நவம்பர், 2019

மழை!

தமிழ் மழை...!

ஏன் அடைமழை என்கிறோம்?

அடைமழை = வினைத்தொகை
*அடைத்த மழை
*அடைக்கின்ற மழை
*அடைக்கும் மழை

விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை= அடை மழை! 
அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை!


கனமழை வேறு! அடைமழை வேறு!
தமிழில், 14 வகையான மழை உண்டு!

1. மழை
2. மாரி - தாய் மார்பிலொழுகு பால் போல், அலையாது சீராகப் பெயல்.
3. தூறல் - சிறிய மழை
4. சாரல் -  மலையில் பட்டு விழும் மழை.
5. ஆலி - மழை துளி
6. சோனை - விடா மழை
7. பெயல் - நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, காலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும். 
8. புயல் - புயல் என்பது காற்றுடன் வரும் மழையைக்குறிக்கும்
9. அடைமழை - அடைத்த கதவு திறக்காத மழை 
10. கனமழை - அளவில் பெரிய துளிகள் உள்ள மழை.
11. ஆலங்கட்டி - பனிக்கட்டிகள், மழையுடனோ அல்லது தனியாகவோ வானில் இருந்து விழுதல் 
12. ஆழிமழை - கடலில் பொழியும் இடைவிடாத மா மழையை குறிக்கும்
13. துளிமழை - மழை
14. வருள்மழை -

செவ்வாய், 29 அக்டோபர், 2019

என் சமூகம்

கடந்த 5 நாட்களாக தமிழகமே உறைந்து  உணர்ச்சியோடு பார்த்த ஒரு செய்தி.... சுஜித்தின் போராட்டம் ... எல்லோரும் அரசாங்கத்தை குறைக்  கூறிக்கொண்டு இருக்கிறோம்... போதிய கருவி இல்லை... போதிய வசதி இல்லை .. போதிய திறன் இல்லை என்று.... உண்மையில் யார் குற்றவாளி ...???

உண்மையை சற்று யோசிப்போம் !!!!

இன்று நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் காரணம் நாம் மட்டுமே....

ஆழ்த்துளை  கிணறு அமைத்து தருவது அரசா ??? இல்லை  நாமா ??? அதை சரிவர  மூடாமல்  விடுவது யார் பொறுப்பு ??

ஆழ்த்துளை கிணறு மட்டும் இன்று பிரச்சனை அல்ல....

பேனர் கலாச்சாரம், வண்டிகளில் பல  வண்ண விளக்குகள், குப்பைகளை கண்ட இடத்தில் கொட்டுதல், மது அருந்துதல், அருந்தும் மது பாட்டில்களை நிலத்திலே போட்டு உடைத்தல்  இன்னும் பலப்பல ....

பேனர் அரசு மட்டுமா வைக்கிறது??? ஒவ்வொரு திருவிழாவிலும், நிகழ்ச்சிகளிலும் நாமும் வைத்து இருக்கிறோமே .... பேனர் வைத்தால் ஆபத்து  என்று தெரிந்தும் நமது இல்ல நிகழ்ச்சிகள்,திருவிழாக்களில் வைக்கிறோமே ... அது தவறில்லையா??

வாகனம் ஓட்டுவது என்பது நமது பயண நேரத்தை குறைக்க கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கண்டுபிடிப்பு. அதை நாம் எவ்வாறு பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம் ?? அதி வேகம் , வண்டிகளை தேர் போல் பல வண்ண விளக்குகளை,கொண்டு அலங்கரித்தல் என்று செய்கிறோம். அதனால் பிறருக்கு ஏற்படும் அசவுகரியங்களை என்றாவது உணர்ந்து இருப்போமோ ??

குப்பைகளை கண்ட இடத்தில் நாம் கொட்டிவிட்டு  அரசு சுற்று சூழலை பாதுகாக்க வில்லை என்று குறை சொல்வது நியாயமா ???

மது விற்பது அரசின் தவறு எனில் அதை வாங்கி அருந்துவது யாரின் தவறு???
மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் குடிப்பது அவரவர் விருப்பம்... ஆனால் மது பாட்டில்களை நிலத்தில் உடைப்பது ???? அந்த நிலத்தில் பல உயிர்கள் பயணிக்கும் .. சிறியவர் முதல் பெரியவர் வரை பலர் பயன்படுத்தும் பாதை ....

இன்று சுஜித்தின் மரணத்திற்கு வருந்தும் நாம் தெரிந்தோ தெரியாமலோ ஓவ்வொரு நாளும் யாரோ ஒருவரின் கஷ்டத்திற்கு காரணமாகிக்கொண்டு இருக்கிறோம்.

இது நாம் வாழும் சமூகம், நம் தலைமுறை வாழும் சமூகம் என்பதை உணர்ந்து இனியாவது சமூக பொறுப்புணர்வோடு நடப்போம்... இதுவே நாம் செய்யும் உண்மையான மரியாதையை ....

திங்கள், 30 செப்டம்பர், 2019

A Best Friend

Dear best friend,

You took my hand and showed me the way, when I was blinded by unfortunate fate.
You took my hand and prayed with me, while my troubles quickly faded away.
You took my hand and dried my tears, when I cried over it all.
You took my hand and helped me understand, when I questioned our almighty one.
You took my hand and made me promise, I'd never walk alone again.
You took my hand and mended my friendship, when I was too stubborn to say anything.
You took my hand and made me laugh, when we remembered our funny mistakes.
You took my hand and made me see, that God has a special plan for me.
Now take my hand and never let go, because our friendship means more than you'll ever know!!

Nobody sees
nobody knows
We are a secret can't be exposed
That's how it is
that's how it goes
Far from the others
close to each other
In the daylight, in the daylight,
When the sun is shining,
On the late night, on the late night,
When the moon is blinding
In the plain sight, plain sight,
Like stars in hiding,
You and I burn on
Put two and together, for-ever will never change
Two and together will never change
Nobody sees nobody knows
We are a secret, can't be exposed
That's how it is
that's how it goes
Far from the others, close to each other
That's when we uncover cover
My silence my silence is in your arms
When the world gives heavy burdens
I can bear a thousand times
On your shoulder, on your shoulder
I can reach an endless sky
Feels like paradise
Put two and together, for-ever will never change
To my twin

Teacher

Teacher - a word that takes me back to the start,
I tightly clenched my mother's hand,
I was afraid to let her go.
But suddenly somebody held my other hand
and all my fear flew 'cause there was someone to understand.
She wiped my tears and took me to class.
It's when my grooming starts.
I understood that a teacher is the second mother or father I had,
For which I'm still glad.
I am glad that I lived under your guidance.
you taught me all, all you had.
All the manners and values I have are just because of you
In my growing life, you are the stem.
Like a tree, I have reached heights,
For my strength re-unites.
you are my preachers,
you live in my heart forever.
you have given me strength to endeavor.
you are my most precious treasure.

வியாழன், 19 ஜனவரி, 2017

நாங்கள் தமிழர்கள்!!!!!!

சீறும் காளையைக் காக்க
சிங்கமென புறப்பட்டோம்

தெள்ளிய எண்ணம் கொண்டோம்
தீர்க்கமான முடிவைக் கொண்டோம்

எண்ணிய எண்ணமெல்லாம் எட்டும்வரை
எட்டுத்திக்கும் ஓயமாட்டோம்

விழா முடிந்ததும் வீடு திரும்புவோம் என நினைத்தீரோ
வீறு நடையிட்டு வருகிறோம்
எங்கள் உரிமையை மீட்டெடுக்க

உங்கள் பணத்தாசைக்காக
எங்கள் பண்பாட்டை விடமாட்டோம்

எங்கள் வீரம் இன்னும் மரிக்கவில்லை
மதியை நாங்கள் இழக்கவில்லை
சதிப்பல புரிந்து எங்களை அழிக்க நினைத்தால்
புதியதோர் விதி செய்வோம்.
ஏனெனில்
நாங்கள் தமிழர்கள்!!!!!!

#தமிழச்சி மெர்லின்

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

என் கலாச்சாரத்தில் தலையிட அதிகாரம் கொடுத்தவர் யார்????? ஜல்லிக்கட்டு எங்கள் உரிமை!!!!


ஜல்லிக்கட்டு!!!!! எம் பாரம்பரியம். கலாச்சாரம். யாரோ வழக்குத் தொடர்ந்தார்கள் என தடைப்பட்டுக் கிடக்கிறது!!! இந்த உலகில் ஒவொரு இனத்திற்கும் ஒரு பாரம்பரியம் பழக்க வழக்கம் கலாச்சாரம் என்று இருக்கிறது. அதில் தலையிடவும் மாற்றவும் எவருக்கும் அதிகாரம் இல்லை. அது அத்துமீறல்!!! நாங்கள் காளைகளை கடவுளாக வழிபடுகிறோம். நங்கள் ஜல்லிக்கட்டிற்கு ஒரு அர்த்தம் உள்ளது.



உலகம் முழுதும் சேவல் சண்டை, காளை சண்டை, நாய்கள் சண்டை என் பல்வேறு விளையாட்டுக்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் ஏதேனும் ஒரு விலங்கு இறந்தால் மட்டுமே வெற்றி உறுதி செய்யப்படும். ஆனால் நம் பாரம்பரிய ஜல்லிக்கட்டு காளைகளை கொள்வதல்ல. மாறாக பசுக்களுக்காக நடத்தப்படும் சுயம்வரமே!!!!!! வழக்குத் தொடர்ந்தவர்களுக்கு இவை தெரியாதோ!!!!



795 மில்லியன் மக்கள் உணவின்றி தவிக்க உலகின் ஒரு மூலையில் தக்காளி திருவிழா என உணவை வீணாக்கும் அவர்களிடம் போய் சொல்லித் தடை வாங்குங்கள்.


ஹோலி என சுற்று சூழலை மசுப்படுத்துக்கிறிர்களே!! அதை தடை செய்யுங்கள்.!!!

உடலுக்கு தீங்கு தரும் எனத் தெரிந்தும் COCK, PEPSI, LAYS ……………………. என அனுமதித்து இருப்பதை தடை செய்யுங்கள். மனித உயிர்கள் விலங்கின் உயிரை விட உயர்ந்தது அல்லவா!!!!

நாட்டு மாடுகளை தவிர்த்து ஜெர்சி வகை மாடுகளை இறக்குமதி செய்வதை தடுக்க வழி செய்யுங்கள்!!!!

ஜல்லிகட்டை அலைபேசியில் விளையாடிக்கொள்ளுங்கள் என சொல்லும் நீதிபதிகளே!!!! உங்கள் கலாச்சார விளையாட்டையோ இல்லை கலச்சாரத்தையோ  அலைபேசியில் விளையாட நீங்கள் தயாரா.?????

ஒருவேளை, நாளை இந்தியக் கலாச்சாரத்தில் பெரிய பிழை உள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி என்பது மனித உரிமை மீறல். அதை மாற்ற வேண்டும் என வழக்குத் தொடர்ந்தால் அதற்கும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்து அவரக்கள் சொல்வது சரி என்று ஒத்துக்கொள்வீர்களா????

இனிமேலாவது புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
ஜல்லிக்கட்டு
எங்கள் கலாச்சாரம்!!!!
எங்கள் வீரத்தின் அடையாளம்!!!
எங்கள் உரிமை!!!!
எங்கள் மரபு!!!!
எங்கள் பண்பாடு!!!
நங்கள் தமிழர்கள் என்பதால் தான் உத்தரவுகளை மதித்துக்கொண்டிருக்கிறோம். இதனால் நங்கள் கோழைகள் அல்ல. இனியும் எங்கள் மனதை புண் படுத்துவதை விடுத்து எங்கள் கலாச்சாரத்தோடு வாழ விடுங்கள்.






புதன், 23 நவம்பர், 2016

இன்றைய நவீனம்

சாலையோர மரங்களை வெட்டி
சாலையின் நடுவில் பூச்செடி வைப்பதே
இன்றைய நவீனம்

Image result Image result

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

சிதம்பர ரகசியம்

Chidambara Rahasyam (Secret ). After 8 years of R & D, Western scientists have proved that at Lord Nataraja 's big toe is the Centre Point of World 's Magnetic Equator. Our ancient Tamil Scholar Thirumoolar has proved this Five thousand years ago! His treatise Thirumandiram is a wonderful Scientific guide for the whole world. To understand his studies, it may need a 100 years for us. Chidambaram temple embodies the following characteristics : 1) This temple is located at the Center Point of world 's Magnetic Equator. 2) Of the "Pancha bootha" i.e. 5 temples, Chidambaram denotes the Skies. Kalahasthi denotes Wind. Kanchi Ekambareswar denotes land. All these 3 temples are located in a straight line at 79 degrees 41 minutes Longitude. This can be verified using Google. An amazing fact & astronomical miracle ! Of the other two temples, Tiruvanaikkaval is located at around 3 degrees to the south and exactly 1 degree to the west of the northern tip of this divine axis, while Tiruvannamalai is around midway (1.5 degree to the south and 0.5 degree to the west). 3) Chidambaram temple is based on the Human Body having 9 Entrances denoting 9 Entrances or Openings of the body. 4) Temple roof is made of 21600 gold sheets which denotes the 21600 breaths taken by a human being every day (15 x 60 x 24 = 21600) 5) These 21600 gold sheets are fixed on the Gopuram using 72000 gold nails which denote the total no. of Nadis (Nerves) in the human body. These transfer energy to certain body parts that are invisible. 6) Thirumoolar states that man represents the shape of Shivalingam, which represents Chidambaram which represents Sadashivam which represents HIS dance ! 7) "Ponnambalam " is placed slightly tilted towards the left. This represents our Heart. To reach this, we need to climb 5 steps called "Panchatshara padi " "Si, Va, Ya, Na, Ma " are the 5 Panchatshara mantras. There are 4 pillars holding the Kanagasabha representing the 4 Vedas. 8) Ponnambalam has 28 pillars denoting the 28 "Ahamas "as well as the 28 methods to worship Lord Shiva. These 28 pillars support 64 +64 Roof Beams which denote the 64 Arts. The cross beams represent the Blood Vessels running across the Human body. 9) 9 Kalasas on the Golden Roof represent the 9 types of Sakthi or Energies. The 6 pillars at the Artha Mantapa represent the 6 types of Sashtras. The 18 pillars in the adjacant Mantapa represents 18 Puranams. 10) The dance of Lord Nataraja is described as Cosmic Dance by Western Scientists. Whatever Science is propounding now has been stated by Sanatan Dharma (Hinduism) thousands of years ago

Image result

வெள்ளி, 15 ஜனவரி, 2016

ஜல்லிக்கட்டின் பின்னணியும் மறைக்கப்படும் உண்மையும்...


ஜல்லிக்கட்டு வரலாறு

மனிதன் கற்காலத்திலிருந்து முதலில் வேட்டையாடுதலில் தான் ஈடுபட்டான். அதன் மூலம்தான் உணவைப் பெற்றான். ஆனால் மனிதன் மாடுகளை உழவுக்குப் பயன்படுத்தியபின்பு தான் நாகரிகம் வளரத் தொடங்கியது. மாடுகளை கடவுளாக வழிபடத் தொடங்கினர். தன் குடும்ப உறுப்பினராக பேணிக்காத்தனர்.
கட்டிபோட்ட நிலையில் காளைகள் வளர்ந்தால் அது எதற்கும் உதவாது. மணலில் புரண்டால் தான் உடல் வலுவாகும். வேகமாக ஓடினால்தான் கால்கள் திடம் பெறும். அவை திடமாக இருந்தால் தான் கலப்பினமில்லாத மாடுகளைப் பெற முடியும். எனவே தான் தொன்று தொட்டு காளைமாடுகளை நம் முன்னோர்கள் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு என் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
கலப்பினமில்லா மாடுகளில் இருந்து தரமான பாலையும் பால் சார்ந்த பொருட்களையும் பெற முடியும்.



இதற்கும் ஜல்லிக்கட்டு தடைக்கும் என்ன சம்மந்தம்???

நம் நாடு பால் மற்றும் பால் சார்ந்த வியாபாரத்தில் முன்னிலைப் பெற்று தன்னிறைவுடன் விளங்குகிறது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் ஜெர்சி போன்ற கலப்பின மாடுகளை இங்கு அனுப்பி நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வகுத்த வியூகமே ஜல்லிகட்டுக்கு தடை.
நம் நாட்டு மாடுகளின் சாணத்திலும் சிறுநீரிலும் தான் கிருமி நாசினி மற்றும் பிற நுண்ணுயிர்கள் அதிகம் உள்ளன. இவை நம் நாட்டுத் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வளர்பவை. இவற்றின் உணவும் இயற்கை உணவுகளே!!
ஆனால் பன்னாட்டு நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்படும் ஜெர்சி இன மாடுகள் குளிர்பிரதேசங்களில் வளர்ந்தவை. அவற்றை வளர்க்க தொழுவத்தில் குளிர்சாதனம் பொருத்த வேண்டும். அவற்றிற்கு உணவு, மருந்து முதலியவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். இதை எளிய மக்களால் சுமக்க முடியாது. அவர்கள் கூலித்தொழிலாளர்கள் ஆக்கப்படுவார்கள். இதனால் நாட்டு மாடுகளின் என்ணிக்கை குறையும். சுருக்கமாக சொல்லப்போனால் விவசாயிகள் பன்னாட்டு நிறுவனங்களை நம்பி இருக்கும் அடிமைகளாக மாற்றப்படுவார்கள்.




பன்னாட்டு நிறுவனத்தின் பின்னணி

நாம் உலகிலேயே மாட்டிறைச்சி, மாடு சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பிரேசிலை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தில் உள்ளோம். இதழ் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
விதை, உரம், போன்றவற்றில் கலப்பினத்தை கொடுத்து விளை நிலத்தை நச்சாக்கியது போல இப்பொது பால் வணிகத்திலும் நம்மை முட்டாளாக்க அவர்கள் எடுத்திருக்கும் ஆயுதம் தான் ஜல்லிக்கட்டுத் தடை. நாட்டு மாடுகளை குறைத்து ஜெர்சி மாடுகளை இறக்குமதி செய்து பின் அதையும் நிறுத்திவிட்டால் இந்தயாவில் பால் உற்பத்தி என்பதே கனவாகிவிடும் அல்லவா!!!!


யார் இந்த peta????

ஜல்லிக்கட்டை எதிர்க்கும் peta அமைப்பு இந்தியாவை சார்ந்தது அல்ல. இது ஒரு அமெரிக்க அமைப்பு. சாலையில் அனாதையாக சுற்றும் மாடுகளை காப்பாற்றி அவற்றை பேணுவதாக அறிவித்துக்கொள்ளும் இவர்கள் உண்மையில் கருணைகொலை என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்காக கொடூர முறையில் மாடுகளை கொன்று இறைச்சியை விற்றுவருகின்றனர். மாற்றான் படத்தில் மாடுகள் அதிக பால் கொடுக்க ஊக்கமருந்து கொடுப்பதுபோல் அவர்கள் உண்மையில் செய்து கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளை தட்டிகேட்க துப்பில்லாத இந்த அமைப்பு இங்கு நம் நாட்டில் வந்து வீரத்தை காட்டுகிறோம் என்று நம் பொறுமையை சோதித்துக் கொண்டிருக்கிறது.



இதை கண்டுக்கொள்ள எந்த தமிழக அரசும் முன்வரவில்லை. ஏனெனில் அவர்கள் பிழைக்க வந்தவர்கள். அவர்களுக்கென்னத்தெரியும் வீரத்தமிழரின் வரலாறு????

மீண்டும் வியாபாரம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாக அனைவரும் கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றுகின்றனர்.

தமிழா!! விழித்தெழு!

இது நாம் சிந்திக்கும் தருணம். நாம் அமைதியாக இருக்கிறோம் என்பதற்காக நாம் கோழைகள் என கருதிவிட்டனரோ!! தமிழனை ஆளத் தமிழன் வாந்தால் தான் தமிழரின் வீரமும் பெருமையும் உணர்ச்சியும் புரியும். ஆயிரம் போரட்டங்கள் நடத்தியும் யார்காதிலும் விழவில்லையே... யார் கண்ணுக்கும் தெரியவில்லையே!! நாகரிகத்துக்கும் கலாச்சாரத்துக்கும் வித்தியாசம் உண்டு. நம் முன்னோர்கள் காரணமின்றி எதையும் சொல்லிவிட்டு செய்துவிட்டு செல்லவில்லை. ஒவ்வொரு செயலுக்கு பின்னும் ஆழமான அறவியல் உண்மைகள் உறைந்து உள்ளன. நாகரிக வளர்ச்சி என்று அந்நியனை பின்பற்றுவதை இனிமேலாவது நிறுத்துவோமா!!!!



சிந்திக்க இதுவே சிறந்த நேரம்!!! கூகுளை நிர்வகிக்கும் திறன் இருக்கும் தமிழனுக்கு தான் நாட்டை ஆளத் திறமை இல்லையா??? இல்லை தமிழனை ஆளத் தமிழன் இல்லையா???? இலங்கைத் தீர்வு, காவிரி தண்ணீர், முல்லைப்பெரியார் ஆணை எல்லாம் அந்நியன் ஆண்டால் அன்னியமாகதான் இருக்கும். தமிழன் ஆண்டு இருந்தால் இந்நேரம் முடிந்திருக்கும்.


சிந்திப்போம்....
நாம் வீரத்தமிழர்கள்!!!!!






செவ்வாய், 28 ஜூலை, 2015

காலத்தால் வாழும் கலாம்....


யாரும் எதிர்பார்க்கா தருணத்தில் எந்திரத்தை வென்ற மனிதனின் இறப்பு....!!!
இளைஞர்களையும் மாணவர்களையுமே ஆக்க சக்தியாக நினைத்த உன்னத மனிதரின் இழப்பு அனைவருக்குமே ஆற்ற இயலா துன்பம். எளிய மனிதர்!! தீர சிந்தனையாளர்!! சிறந்த எழுத்தாளர்!! கவிதைகள் புனையும் கலைஞன்!!! அணு அறிவியலின் தந்தை!!! அப்பப்பா!!!!! ஒரு மனிதருக்குள் இத்தனை வடிவங்களா!!! இவரை படைத்த இறைவன் உண்மையிலேயே ரசிகன். அத்தனை திறமைகளையும் ஓர் உயிரிலேயே அடைத்து வைத்திருக்கிறானே!!

தன் வாழ்நாள் முழுதும் நாட்டுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் இளைஞர்களின் எழுச்சிக்காகவும் தன்னை முழுமையாக அர்பணித்த அற்புத மனிதரின் இறப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு.. இளைஞர்களும் மாணவர்களுமே இந்தியாவை உருவாக்கும் தூண்கள் என மாணவர்களைத் தேடி தேடி அலைந்த கால்களுக்கு இறைவன் அளித்த ஓய்வு.... யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம். தன கடைசி மூச்சு வரை மாணவர்களுக்காக உரையாற்றிய வாய்ப்பு...!!!
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளரின் வரலாறு இதோ:

பிறப்பு: அக்டோபர் 15, 1931
இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

இளமைப் பருவம்:

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 201௦
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடையf பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இந்தியா 2௦2௦ என்ற தொலைநோக்கு சிந்தனையை இன்றைய அரசியல் தலைவர்கள் ஆழ்ந்து சிந்தித்து கலாம் உருவாக்க நினைத்த வளம்மிக்க இந்தியாவை உருவாக்குவோம்... அதுவே நாம் அவருக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய அஞ்சலி. இதிலும் அரசியல் ஆதாயம் பார்க்காமல் மக்களின் நலனையும் நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு செயல் பட கட்சிகள் முனைய வேண்டும்.

 தமிழில் பயின்ற மாமேதை EU பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதும் தமிழின் பெருமையையும் அருமையையும் உலகம் உணரசெய்து அனைவரின் பாராட்டைப் பெற்றார். இது அவருக்கு தன் தாய் மொழிமேல் இருந்த பற்றை வெளிக் காட்டுகிறது. இதனை நாமும் உணர வேண்டும். தமிழில் பேசுவது அவமானமோ அல்லது இழுக்கோ அல்ல.

அது நம் தாய் மொழி என பெருமைப்போற்றி பேசுவோம்...!!

தமிழன்னையின் தவப்புதல்வன் உடலால் மறைந்தாலும் இளைஞர்கள் மாணவர்கள் மனதில் என்றுமே நிலைத்து நிற்கும் உன்னத தலைவர். வாழ்க அவர் கொள்கைகள்!! வளர்க அவர் கண்டுபிடிப்புகள்.....
 

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

சந்திர கிரகணம்



சந்திர கிரகண நிவர்த்தி வழிபாடு:
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது நிகழ்வதே சந்திர கிரகணம். பூமியின் நிழலானது சந்திரனின் மீது விழுவதால், அது மறைக்கப்படுகிறது. அந்த நிழலில் சந்திரன் மெல்ல மெல்ல நகரும்போது, இளம் சிவப்பு நிறத்தில் இருப்பதாகச் சொல்வர்.
இந்த நாளில், கதிரியக்கத்தின் பாதிப்பு ஏற்படாமலிருக்க, அப்போது உணவு ஏதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்த உணவில் தாக்கம் ஏற்பட்டு, அதனை உட்கொள்வதன் மூலமாக நோய் ஏற்படலாம்.



அதேபோல், மௌனம் அனுஷ்டிப்பதும், அநாவசிய பயணங்களைத் தவிர்த்து வீட்டிலேயே இருப்பதும் நன்று. கிரகணக் கதிர்வீச்சுகள், நம் தோல் பகுதியைத் தாக்காமல் இருக்க அது உதவும். வீட்டில் <உள்ள பொருள்களில் கிரகணத் தாக்குதல் நிகழ்ந்திருக்கலாம். அதனால்தான் விடிந்ததும், அணிந்திருந்த உடைகள், பாய், போர்வை என அனைத்தையும் நனைத்து, நீராடிய பிறகே, காபி-டீ ஆகியன உட்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
கிரகணத்தின் தாக்கம் நம்மை பாதிக்காமல் இருக்க தர்ப்பை புல்லை குடிக்கும் நீரிலும், உணவுப்பொருள்களிலும், சுவாமி அறையிலும் வைப்பது நல்லது. அத்துடன் கிரகண தோஷங்கள் ஏதும் நிகழாமல் இருக்க, நம் இஷ்ட தெய்வங்களை, குலதெய்வங்களை மனதாரப் பிரார்த்தனை செய்வது நற்பலனைத் தரும்!

குறிப்பாக,
ததி சங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம்: நமாமி சம்போர் மகுட பூஷணம்
எனும் சந்திர பகவானுக்கு உரிய ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டால் சந்திர பலம் கிடைக்கும்; சந்தோஷம் பெருகும்; சங்கடங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்! இந்த ஸ்லோகத்தை எழுதி, நெற்றிப் பட்டமாகவோ அல்லது கையில் கங்கணமாகவோ கட்டிக்கொண்டு, மனதார ஸ்லோகத்தைச் சொல்லி, பகவானைப் பிரார்த்திக்க வேண்டும்.

பிறகு அதனைக் கழற்றிவிட்டு, அத்துடன் தேங்காய், பழம், தட்சணை ஆகியவற்றை எவருக்கேனும் வழங்கி, சாந்தி செய்துகொள்வது, கிரகண தோஷத்தில் இருந்து பாதுகாக்கும்; பலம் சேர்க்கும். அத்துடன் நவக்கிரகத்தில் உள்ள சந்திரபகவானுக்கு தீபம் ஏற்றி மனம் நிறையப் பிரார்த்தனை செய்யுங்கள்; இதனால் அவனும் குளிர்ந்து நமக்கும் குளிர்ச்சியான வாழ்வு தருவான்.

இயற்கை, மனிதர்கள், தாவரங்கள், விலங்கினங்கள் என எல்லாமே சூரியக் கதிர்களில் இருந்து பரவுகிற சக்தியால் இயங்குகின்றன. இதனால்தான், சூரியனின் திசை பார்த்து, காலையிலும் பகலிலும் மாலையிலும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கச் சொல்கிறது சாஸ்திரம்: சூரிய நமஸ்காரம் செய்வதை வலியுறுத்துகின்றன புராணங்களும், சாஸ்திரங்களும்.

நம்முடைய இன்ப-துன்பங்களுக்கு, நமது சிந்தனைகளும் செயல்பாடுகளுமே காரணம். சிந்தனையில் மாற்றங்களும் செயல்பாட்டில் வேறுபாடுகளும் வருவதற்குச் சூரிய-சந்திரக் கதிர்களின், சக்திகளின் பங்கு வெகுவாக உள்ளது.

சூரிய -சந்திரக் கதிர்களின் தாக்கங்கள் நிறைந்திருக்கும் தருணத்தை கிரகணம் என்கிறோம்.
அந்தக் கிரகணத்தில்... அதாவது, அப்போது பூமியில் வியாபிக்கிற கதிர்களின் தாக்கம், கர்ப்பப்பையில் இருக்கிற சிசுவைக்கூட பாதிக்கவல்லது என்கின்றன வானியல் சாஸ்திரங்கள்.

ஞாயிறு, 29 மார்ச், 2015

தெரியுமா...?

*இந்தியாவில் தமிழில்தான் பைபிள் முதன் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது.
*ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
* உலகப் புகழ் பெற்ற ‘மோனோலிசா’ ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
* வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.
* எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
* உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 உள்ளன.
* தேசியக் கொடியை முதன் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க். 1291ல் உருவாக்கப்பட்டது.
* அமெரிக்காவைவிட சகாரா பாலைவனம் பெரிது.
* எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் உயிர் வாழும்.
* ஒரு பென்சிலைக் கொண்டு, 58 கி.மீ. நீளமான கோடு போடலாம்.
* பாம்புகளுக்கு கேட்கும் சக்தி இடையாது.
* நண்டிற்கு தலை கிடையாது. அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.
* வெள்ளை என்பது ஒரு நிறம் கிடையாது. அது 7 வண்ணங்களின் கலவை ஆகும்.
* முற்றிப் பழுத்துக் காய்ந்த தேங்காய், மரத்தில்ருந்து பகலில் விழாது. இரவில்தான் விழும்.
* நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும். நாய்க்கு நாக்கில் மட்டும்தான் வியர்க்கும்.
* சிலந்திப் பூச்சிக்கு 8 கண்கள் உண்டு.
* இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.
*ஆஃப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.


Image result for அப்படியா

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *