தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

வலியைப்போக்க எளிய வழிகள்...

உடம்பெல்லாம் ஒரே வலி. அடிச்சி போட்டமாறி இருக்கு….” இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று. வேகமாக போய் கொண்டிருக்கும் உலகில் உடற்பயிற்சி செய்வதற்கோ ஓடி ஆடி விளையாடுவதற்கோ கூட நமக்கு நேரம் இல்லை. இருந்த இடத்திலேயே வேலை செய்து இல்லாத வலிகளை எல்லாம் வாங்கிக் கொண்டிருக்கிற்றோம். ஒவ்வொரு வலிக்கும் ஒரு வலிநிவாரண மருந்து உட்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என் அறிந்தும் அவற்றைப் பயன்படுத்த நாம் தயங்குவதில்லை. ஆனால் எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தாமல் வலிகளை குணமாக்கும் வல்லமை நம் வீட்டில் உள்ள பொருட்களிலேயே உள்ளது. எனக்குத் தெரிந்த சில வலிகளுக்கு சில வழிகளை குறிப்பிட்டுள்ளேன்.. முயற்சி செய்து பாருங்களேன்..

பாத வலிக்கு
வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து, அந்த நீரில் கால்களை சிறிது நேரம் ஊற வைத்தால், வலி நீங்குவதோடு வீக்கமும் குறையும்.

முதுகு வலிக்கு
முதுகு வலியின் போது திராட்சை சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருந்து, முதுகு வலி வராமல் தடுக்கும்.  எனவே நாள்பட்ட முதுகு வலியைக் கொண்டவர்கள், தினமும் திராட்சை சாப்பிட்டால், முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

தொண்டை வலிக்கு
தொண்டையில் புண் அல்லது அதனால் ஏற்படும் வலியை போக்குவதற்கு, தேனை தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

அடிவயிற்று வலிக்கு
மீன்களில் சால்மன் அல்லது டூனா போன்ற மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இது வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்யக்கூடிய சக்தி கொண்டவை. எனவே இத்தகைய மீன்களை அதிகம் சாப்பிட்டால், அடிவயிற்றில் ஏற்படும் வலியைத் தணிக்கலாம்.

காது வலிக்கு
காதுகளில் வலி ஏற்பட்டால், பூண்டுகளை தட்டி கடுகு எண்ணெயில் போட்டு வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை காதுகளில் ஊற்றினால் உடனே வலி நீங்கிவிடும்.

வாயுத் தொல்லைக்கு
அன்னாசியை சாப்பிட்டு வந்தால் வாயுவினால் ஏற்படும் வயிற்று வலியை குறைக்கலாம். அன்னாசி வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, வயிற்றில் வாயு சேர்வதைத் தடுக்கும்.

பல் வலிக்கு
சொத்தை காரணமாக பற்களில் வலி ஏற்பட்டால், அப்போது கிராம்புகளை அந்த பற்களின் மேல் வைத்து கடித்துக் கொண்டால் பல் வலி போய்விடும்.

தசைப் பிடிப்புக்கு
உடலில் ஆங்காங்கு தசைப் பிடிப்புகள் ஏற்பட்டால், அப்போது வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுத்தால் பிடிப்புக்கள் நீங்குவதோடு, உடலுக்கு மசாஜ் செய்தது போன்றும் இருக்கும்.

மூட்டு வலிக்கு
மூட்டு வலி உள்ளவர்கள் செர்ரிப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆந்தோசையனின்கள் மூட்டு வலியை குணமாக்கும்.

கால் பிடிப்புக்கு
உணவில் தக்காளியை அதிகம் சேர்த்தால், அதில் உள்ள பொட்டாசியம் கிடைத்து, நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

ஒற்றை தலைவலிக்கு
காபியை தினமும் அளவாக பருகினால் ஒற்றை தலைவலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வீக்கத்தை குறைக்க..
மஞ்சளில் எண்ணற்ற ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளதால், அது பல்வேறு வலிகள் மற்றும் வீக்கங்களை சரிசெய்யும். அதிலும் வீக்கம் அதிகம் உள்ள இடத்தில், மஞ்சளை தண்ணீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை தடவினால், வீக்கமானது தணியும்.

மாதவிடாய் வயிற்று வலிக்கு
மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை சரிசெய்ய, ஓட்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். அல்லது வாழைப்பழத்துடன் பாலும் சர்க்கரையும் சேர்த்து குடித்தால் வயிற்றுவலி குறையும்.

தசைப்புண்ணுக்கு
அதிகப்படியான வேலைப்பளுவால் தசைகள் அளவுக்கு அதிகமாக வலிக்க ஆரம்பித்தால், அப்போது வெதுவெதுப்பான நீரில் சிறிது புதினா எண்ணெய் சேர்த்து குளிக்க வேண்டும். அது வலியைக் குறைத்துவிடும்.


தாய்லாந்தில் தமிழ்.....

தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ் எழுத்து படிந்த மட்பாண்டம். தாய்லாந்து(தாய்) மொழியில் தமிழ் சொற்களின் வேர்கள். தாய்லாந்து நம் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது, அக்காலத்தில் தமிழ் மொழியில் இருந்து பலச் சொற்கள் தாய்லாந்து மொழிக்குத் தருவிக்கப்பட்டன. அதில் சிலச் சொற்கள் பின்வருமாறு:

தமிழ்ச்சொல்
தாய்லாந்து மொழிச்சொல்
தங்கம்
 தொங்கம்
கப்பல்
 கம்பன்
மாலை
 மாலே
கிராம்பு
 கிலாம்பு
கிண்டி
 கெண்டி
அப்பா
 பா
தாத்தா
 தா
அம்மா
 மே, தான்தா
பட்டணம்
 பட்டோம்
ஆசிரியர்
 ஆசான்
பாட்டன்
 பா, புட்டன்
திருப்பாவை
 திரிபவாய்
வீதி
 வீதி
மூக்கு
 சாமுக்
நெற்றி
 நெத்தர்
கை
 கை
கால்
 கா
பால்
 பன்
கங்கை
 கோங்கா
தொலைபேசி
 தொரசாப்
தொலைக்காட்சி
 தொரதாட்
குலம்
 குல்
நங்கை
 நங்
துவரை
 துவா
சிற்பம்
 சில்பா
நாழிகை
 நாளிகா
வானரம்
 வானரா
வேளை
 வேளா
மல்லி
 மல்லி
நெய்
 நெய்யி
கருணை
 கருணா
விநாடி
 விநாடி
பேய்/பிசாசு
 பிச/பிசாத்
கணம்
 கணா
விதி
 விதி
போய்
 பாய்
சந்திரன்
 சாந்
ரோகம்
 ரூகி
தூக்கு
 தூக்
மாங்காய்
 மாங்க்
மேகம்
 மேக்,மீக்
பிரான்,
 எம்பிரான் பிரா
யோனி
 யூனி
சிந்தனை
 சிந்தனக்கம், சிந்தனா
சங்கு
 சான்க்
தானம்
 தார்ன்
பிரேதம்
 பிரீதி
நகரம்
 நகான்
பார்வை
 பார்வே
ஆதித்தன்
 ஆதித்
உலகம்
 லூகா
மரியாதை
 மார
தாது
 தாட்
உலோகம்
 லூகா
குரோதம்
 குரோதீ
சாமி
 சாமி
பார்யாள்
 பார்ய
திருவெம்பாவை
 த்ரீயம்பவா

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *