தமிழ்
மாதங்களின் பெயர்களை சொல்ல சொன்னால் சித்திரை துவங்கி பங்குனி வரை சொல்லிவிடுவோம்
அல்லவா..? ஆனால் அவை உண்மையில் மாதங்களின் தமிழ் பெயர்கள்
அல்ல என்று தெரியுமா...? ஆம் உண்மையான தமிழ் மாதங்களின்
பெயர்களை தமிழ் அறிஞர்கள் 1921-ஆம் ஆண்டில் வகுத்தனர்.
நாம் பயன்படுத்தும் பெயர்கள் உண்மையில் ஆரியர்களால் வகுக்கப்பட்ட பெயர்களாகும்..
இனி தமிழ் மாதங்களின் பெயர்களைக் காணலாம்.
வழங்கிவரும்
பெயர்கள்
|
உண்மைத்தமிழ்
பெயர்கள்
|
பொருள்
|
தை
|
சுறவம்
|
சிறா
|
மாசி
|
கும்பம்
|
குடை
|
பங்குனி
|
மீனம்
|
மீன்
|
சித்திரை
|
மேழம்
|
ஆடு
|
வைகாசி
|
விடை
|
எருது
|
ஆனி
|
ஆடவை
|
ஆண்
|
ஆடி
|
கடகம்
|
நண்டு
|
ஆவணி
|
மடங்கல்
|
சிங்கம்
|
புரட்டாசி
|
கன்னி
|
பெண்
|
ஐப்பசி
|
துலை
|
நிறுவை
|
கார்த்திகை
|
நளி
|
தேள்
|
மார்கழி
|
சிலை
|
சிற்பம்
|
தமிழ் மாதங்கள் சுறவத்தில் தொடங்கி சிலையில் நிறைவு பெறுகிறது.
என்ன ஒரு ஆச்சரியம் என்றால் தமிழ் அறிஞர்கள்
மாதங்களை தமிழில் திருத்தி 90 வருடங்கள் ஆகியும் இன்னமும் தமிழ் பாடப்புத்தகத்தில் இந்த மாற்றம் ஏன்
இடம் பெறவில்லை...? இது இன்னமும் தமிழ் பாடப்புத்தகம்
வகுக்கும் அறிஞர்களுக்கு தெரியவில்லையோ....?
அருமையான விளக்கத்துடன் பதிவு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.