தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு

அறுபத்தி நான்கு ஆயக்கலைகள் இவையே...
1.    அட்சரங்கள்
2.    விகிதம்
3.    கணிதம்

4.    வேதம்
5.    புராணம்
6.    வியாகரணம்
7.    ஜோதிடம்
8.    தர்ம சாஸ்த்திரம்
9.    யோக சாஸ்த்திரம்
10. நீதி சாஸ்த்திரம்
11. மந்திர சாஸ்த்திரம்
12. நிமித்த சாஸ்த்திரம்
13. சிற்ப சாஸ்த்திரம்

14. வைத்திய சாஸ்த்திரம்
15. சாமுத்ரிகா லட்சணம்
16. சப்தப்பிரம்மம்
17. காவியம்
18. அலங்காரம்
19. வாக்கு வன்மை
20. கூத்து

21. நடனம்
22. வீணை இசை
23. புல்லாங்குழல் வாசிப்பு

24. மிருதங்க இசை

25. தாளம்
26. ஆயுதப் பயிற்சி
27. ரத்னப்பரீட்சை
28. கனகப்பரீட்சை(தங்கம் பற்றி அறிதல்)
29. யானை ஏற்றம் மற்றும் சாதி அறிதல்
30. குதிரை ஏற்றம் மற்றும் சாதி அறிதல்
31. ரத சாஸ்த்திரம்
32. பூமியறிதல்
33. போர்முறை சாஸ்த்திரம் மற்றும் தந்திரம்

34. மற்போர் சாஸ்த்திரம்
35. வசீகரித்தல்
36. உச்சாடனம்
37. பகைமூட்டுதல்
38. காம சாஸ்த்திரம்
39. மோகனம்
40. ஆகரஷனம்
41. ரசவாதம்
42. கந்தரவ ரகசியம்
43. மிருக பாஷை அறிதல்
44. துயரம் மாற்றுதல்
45. நாடி சாஸ்த்திரம்

46. விஷம் நீக்கும் சாஸ்த்திரம்
47. களவு
48. மறைத்துரைத்தல்
49. ஆகாயப் பிரவேசம்
50. விண் நடமாட்டம்
51. கூடுவிட்டு கூடுபாய்தல்
52. அரூபமாதல்
53. இந்திர ஜாலம்
54. மகேந்திர ஜாலம்
55. அக்னி ஸ்ம்பனம்
56. ஜலஸ்தம்பனம்
57. வாயு ஸ்தம்பனம்
58. கண்கட்டு வித்தை
59. வாய்கட்டு வித்தை
60. சுக்கில ஸ்தம்பனம்
61. சுன்ன ஸ்தம்பனம்
62. வாள்வித்தை
63. ஆன்மாவை கட்டுப்படுத்துதல்


64. இசை

”அங்கோர் வாட் ” என்றால் என்ன தெரியுமா..?

உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியது எது தெரியுமா? கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர் வாட்” எனும் மிகப் பெரிய இந்து ஆலயம் ஆகும். இதை கட்டியது ஒரு தமிழ் மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். இரண்டாம் சூரியவர்மன்” என்னும் தமிழ் மன்னன் ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றி இந்த ஆலயத்தை கட்டினார்.

இந்த கோவிலானது சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவர் சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதன் கட்டிட பணி நிறைவயடை 27 வருடங்கள் ஆனது. ஆனால் கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்தார். பின்பு ஆறாம் ஜெயவர்மன்ஆட்சிக்கு வந்த பிறகு புத்தகோயிலாக மாறிய இந்த ஆலயம் இன்று வரை புத்த ஆலயமாகவே விளங்கிவருகிறது. அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால் பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டது. பிறகு ஒரு போர்சுகீசிய துறவியினால் மீண்டும் புத்துயிர் பெற்றது. தமிழரின் கலைத்திறனை விளக்கும் பொக்கிஷமாகத் திகழும் இக்கோவில் திரும்பிய திசை எங்கும் சிற்பங்களை கொண்டுள்ளது. 

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் தேசிய சின்னமாகபொறிக்கப்பட்டுள்ளது!.

தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியாது. வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவில் ஒருத் தமிழ் மன்னனால் கட்டப்பட்டது என நினைக்கும் பொதே மெய் சிலிர்க்கிறது.  இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.

தமிழா!!! நாம் மட்டும் தான் தமிழன் என்று சொல்ல வெட்கப்படுகிறோம். பெருமை வாய்ந்த முன்னொர்களைக் கொண்டதில் இனி வெட்கம் எதற்கு?
நானும் தமிழன் என பெருமைக்கொள்வோம்!!!

அங்கோர் வாட் முழுத் தோற்றம்

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

திருமணத்தின் போது பெரும்பாலும் மணமக்களை வாழ்த்துவோர் “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கஎன்று கூறி வாழ்த்துவது உண்டு. அவற்றை பெரும்பாலானோர் பதினாறு குழந்தைகளைப் பெற்று வாழ வேண்டும் என்று தவறான அர்த்தம் கொண்டுள்ளனர். ஆனால் அது பதினாறு செல்வங்களைக் குறிக்கிறது. அவை என்னவென்று பார்ப்போமா?

Ø  கலையாத கல்வி
Ø  கள்ளமில்லா நட்பு
Ø  குறையாத வயது
Ø  குன்றாத வளமை
Ø  மறையாத இளமை
Ø  பரவசமான பக்தி
Ø  பிணியற்ற உடல்
Ø  சலியாத மனம்
Ø  அன்பான துணை
Ø  தவறாத சந்தானம்
Ø  தாழாத கீர்த்தி
Ø  மாறாத வார்த்தை
Ø  தடையற்ற கொடை
Ø  தொலையாத நிதி
Ø  கோணாத செயல்
Ø  துன்பமில்லா வாழ்வு


தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *