தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

வியாழன், 17 ஜூலை, 2014

99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள்


1. காந்தள் மலர்
2. ஆம்பல் மலர்
3. அனிச்சம் பூ
4. குவளை மலர்
5. குறிஞ்சிப் பூ
6. வெட்சிப் பூ
7. செங்கோடுவேரி மலர்
8. தேமாம் பூ
9. மணிச்சிகை(செம்மணிப்பூ)
10. உந்தூழ்(மூங்கில் பூ)
11. கூவிளம் பூ
12. எறுழம்பூ
13. சுள்ளி(மராமரப்பூ)
14. கூவிரம் பூ
15. வடவனம் பூ
16. வாகைப் பூ
17. குடசம்(வெட்பாலை)
18. எருவை(கோரைப்பூ)
19. செருவிளை(வெண்காக்கணம்)
20. கருவிளம் பூ
21. பயினிப் பூ
22. வானிப் பூ
23. குரவம் பூ
24. பசும்பிடி(பச்சிலைப்பூ)
25. வகுளம்(மகிழம்பூ)
26. காயா மலர்
27. ஆவிரைப் பூ
28. வேரல்(சிறுமூங்கில்பூ)
29. சூரல் மலர்
30. சிறுபூளைப் பூ
31. குறுநறுங்கண்ணி மலர்
32. குருகிலை(முருக்கிலை)
33. மருதம் பூ
34. கோங்கம் பூ
35. போங்கம் பூ
36. திலகம் பூ
37. பாதிரி மலர்
38. செருந்தி மலர்
39. அதிரல் பூ
40. சண்பகம் மலர்
41. கரந்தை மலர்
42. குளவி(காட்டு மல்லி)
43. மாம்பூ
44. தில்லைப்பூ
45. பாலைப்பூ
46. முல்லைப்பூ
47. கஞ்சங்குல்லை
48. பிடவம் பூ
49. செங்கருங்காலி மலர்
50. வாழைப் பூ
51. வள்ளிப் பூ
52. நெய்தல் மலர்
53. தாழைப் பூ
54. தளவம்(செம்முல்லைப் பூ)
55. தாமரை மலர்
56. ஞாழல் மலர்
57. மௌவல் பூ
58. கொகுடிப் பூ
59. சேடல்(பவளமல்லி பூ)
60. செம்மல்(சாதிப் பூ)
61. சிறுகெங்குரலி(கருந்தாமரைக் கொடிப்பூ)
62. கோடல்(வெண்காந்தள் மலர்)
63. கைதை(தாழம் பூ)
64. வழைப் பூ(சுரபுன்னை)
65. காஞ்சிப் பூ
66. கருங்குவளைப் பூ(மணிக்குலை)
67. பாங்கர் பூ
68. மரவம் பூ
69. தணக்கம் பூ
70. ஈங்கைப் பூ
71. இலவம் பூ
72. கொன்றைப் பூ
73. அடுப்பம் பூ
74. ஆத்திப் பூ
75. அவரைப் பூ
76. பகன்றைப் பூ
77. பலாசம் பூ
78. பிண்டி(அசோகம்பூ)
79. வஞ்சிப் பூ
80. பித்திகம்(பிச்சிப் பூ)
81. சிந்துவாரம்(கருநொச்சிப்பூ)
82. தும்பைப் பூ
83. துழாய்ப் பூ
84. தோன்றிப் பூ
85. நந்திப் பூ
86. நறவம்(நறைக் கொடிப்பூ)
87. புன்னாகம் பூ
88. பாரம்(பருத்திப்பூ)
89. பீரம்(பீர்கம்பூ)
90. குருக்கத்திப் பூ
91. ஆரம்(சந்தனப்பூ)
92. காழ்வைப் பூ
93. புன்னைப் பூ
94. நரந்தம்(நாரத்தம்பூ)
95. நாகப்பூ
96. நள்ளிருநாறி(இருள்வாசிப்பூ)
97. குருந்தம் பூ
98. வேங்கைப் பூ
99. புழகுப் பூ






கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது.  காரணம்….

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு() ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
அது மட்டும் அல்லாமல், பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட முழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்? ஆச்சர்யம்தான்.


அவ்வளவுதானா அதுவும் இல்லை. இக்காலம் போல இல்லை அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் மழை பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!



ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!


சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.
தினம் ஒரு குறள்

குறள் - 1 அதிகாரம் – 1

குறள்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு  
                                                                                  
 
விளக்கம்:

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *