தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

வெள்ளி, 15 ஜனவரி, 2016

ஜல்லிக்கட்டின் பின்னணியும் மறைக்கப்படும் உண்மையும்...


ஜல்லிக்கட்டு வரலாறு

மனிதன் கற்காலத்திலிருந்து முதலில் வேட்டையாடுதலில் தான் ஈடுபட்டான். அதன் மூலம்தான் உணவைப் பெற்றான். ஆனால் மனிதன் மாடுகளை உழவுக்குப் பயன்படுத்தியபின்பு தான் நாகரிகம் வளரத் தொடங்கியது. மாடுகளை கடவுளாக வழிபடத் தொடங்கினர். தன் குடும்ப உறுப்பினராக பேணிக்காத்தனர்.
கட்டிபோட்ட நிலையில் காளைகள் வளர்ந்தால் அது எதற்கும் உதவாது. மணலில் புரண்டால் தான் உடல் வலுவாகும். வேகமாக ஓடினால்தான் கால்கள் திடம் பெறும். அவை திடமாக இருந்தால் தான் கலப்பினமில்லாத மாடுகளைப் பெற முடியும். எனவே தான் தொன்று தொட்டு காளைமாடுகளை நம் முன்னோர்கள் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு என் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
கலப்பினமில்லா மாடுகளில் இருந்து தரமான பாலையும் பால் சார்ந்த பொருட்களையும் பெற முடியும்.



இதற்கும் ஜல்லிக்கட்டு தடைக்கும் என்ன சம்மந்தம்???

நம் நாடு பால் மற்றும் பால் சார்ந்த வியாபாரத்தில் முன்னிலைப் பெற்று தன்னிறைவுடன் விளங்குகிறது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் ஜெர்சி போன்ற கலப்பின மாடுகளை இங்கு அனுப்பி நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வகுத்த வியூகமே ஜல்லிகட்டுக்கு தடை.
நம் நாட்டு மாடுகளின் சாணத்திலும் சிறுநீரிலும் தான் கிருமி நாசினி மற்றும் பிற நுண்ணுயிர்கள் அதிகம் உள்ளன. இவை நம் நாட்டுத் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வளர்பவை. இவற்றின் உணவும் இயற்கை உணவுகளே!!
ஆனால் பன்னாட்டு நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்படும் ஜெர்சி இன மாடுகள் குளிர்பிரதேசங்களில் வளர்ந்தவை. அவற்றை வளர்க்க தொழுவத்தில் குளிர்சாதனம் பொருத்த வேண்டும். அவற்றிற்கு உணவு, மருந்து முதலியவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். இதை எளிய மக்களால் சுமக்க முடியாது. அவர்கள் கூலித்தொழிலாளர்கள் ஆக்கப்படுவார்கள். இதனால் நாட்டு மாடுகளின் என்ணிக்கை குறையும். சுருக்கமாக சொல்லப்போனால் விவசாயிகள் பன்னாட்டு நிறுவனங்களை நம்பி இருக்கும் அடிமைகளாக மாற்றப்படுவார்கள்.




பன்னாட்டு நிறுவனத்தின் பின்னணி

நாம் உலகிலேயே மாட்டிறைச்சி, மாடு சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பிரேசிலை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தில் உள்ளோம். இதழ் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
விதை, உரம், போன்றவற்றில் கலப்பினத்தை கொடுத்து விளை நிலத்தை நச்சாக்கியது போல இப்பொது பால் வணிகத்திலும் நம்மை முட்டாளாக்க அவர்கள் எடுத்திருக்கும் ஆயுதம் தான் ஜல்லிக்கட்டுத் தடை. நாட்டு மாடுகளை குறைத்து ஜெர்சி மாடுகளை இறக்குமதி செய்து பின் அதையும் நிறுத்திவிட்டால் இந்தயாவில் பால் உற்பத்தி என்பதே கனவாகிவிடும் அல்லவா!!!!


யார் இந்த peta????

ஜல்லிக்கட்டை எதிர்க்கும் peta அமைப்பு இந்தியாவை சார்ந்தது அல்ல. இது ஒரு அமெரிக்க அமைப்பு. சாலையில் அனாதையாக சுற்றும் மாடுகளை காப்பாற்றி அவற்றை பேணுவதாக அறிவித்துக்கொள்ளும் இவர்கள் உண்மையில் கருணைகொலை என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்காக கொடூர முறையில் மாடுகளை கொன்று இறைச்சியை விற்றுவருகின்றனர். மாற்றான் படத்தில் மாடுகள் அதிக பால் கொடுக்க ஊக்கமருந்து கொடுப்பதுபோல் அவர்கள் உண்மையில் செய்து கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளை தட்டிகேட்க துப்பில்லாத இந்த அமைப்பு இங்கு நம் நாட்டில் வந்து வீரத்தை காட்டுகிறோம் என்று நம் பொறுமையை சோதித்துக் கொண்டிருக்கிறது.



இதை கண்டுக்கொள்ள எந்த தமிழக அரசும் முன்வரவில்லை. ஏனெனில் அவர்கள் பிழைக்க வந்தவர்கள். அவர்களுக்கென்னத்தெரியும் வீரத்தமிழரின் வரலாறு????

மீண்டும் வியாபாரம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாக அனைவரும் கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றுகின்றனர்.

தமிழா!! விழித்தெழு!

இது நாம் சிந்திக்கும் தருணம். நாம் அமைதியாக இருக்கிறோம் என்பதற்காக நாம் கோழைகள் என கருதிவிட்டனரோ!! தமிழனை ஆளத் தமிழன் வாந்தால் தான் தமிழரின் வீரமும் பெருமையும் உணர்ச்சியும் புரியும். ஆயிரம் போரட்டங்கள் நடத்தியும் யார்காதிலும் விழவில்லையே... யார் கண்ணுக்கும் தெரியவில்லையே!! நாகரிகத்துக்கும் கலாச்சாரத்துக்கும் வித்தியாசம் உண்டு. நம் முன்னோர்கள் காரணமின்றி எதையும் சொல்லிவிட்டு செய்துவிட்டு செல்லவில்லை. ஒவ்வொரு செயலுக்கு பின்னும் ஆழமான அறவியல் உண்மைகள் உறைந்து உள்ளன. நாகரிக வளர்ச்சி என்று அந்நியனை பின்பற்றுவதை இனிமேலாவது நிறுத்துவோமா!!!!



சிந்திக்க இதுவே சிறந்த நேரம்!!! கூகுளை நிர்வகிக்கும் திறன் இருக்கும் தமிழனுக்கு தான் நாட்டை ஆளத் திறமை இல்லையா??? இல்லை தமிழனை ஆளத் தமிழன் இல்லையா???? இலங்கைத் தீர்வு, காவிரி தண்ணீர், முல்லைப்பெரியார் ஆணை எல்லாம் அந்நியன் ஆண்டால் அன்னியமாகதான் இருக்கும். தமிழன் ஆண்டு இருந்தால் இந்நேரம் முடிந்திருக்கும்.


சிந்திப்போம்....
நாம் வீரத்தமிழர்கள்!!!!!






தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *