கடந்த 5 நாட்களாக தமிழகமே உறைந்து உணர்ச்சியோடு பார்த்த ஒரு செய்தி.... சுஜித்தின் போராட்டம் ... எல்லோரும் அரசாங்கத்தை குறைக் கூறிக்கொண்டு இருக்கிறோம்... போதிய கருவி இல்லை... போதிய வசதி இல்லை .. போதிய திறன் இல்லை என்று.... உண்மையில் யார் குற்றவாளி ...???
உண்மையை சற்று யோசிப்போம் !!!!
இன்று நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் காரணம் நாம் மட்டுமே....
ஆழ்த்துளை கிணறு அமைத்து தருவது அரசா ??? இல்லை நாமா ??? அதை சரிவர மூடாமல் விடுவது யார் பொறுப்பு ??
ஆழ்த்துளை கிணறு மட்டும் இன்று பிரச்சனை அல்ல....
பேனர் கலாச்சாரம், வண்டிகளில் பல வண்ண விளக்குகள், குப்பைகளை கண்ட இடத்தில் கொட்டுதல், மது அருந்துதல், அருந்தும் மது பாட்டில்களை நிலத்திலே போட்டு உடைத்தல் இன்னும் பலப்பல ....
பேனர் அரசு மட்டுமா வைக்கிறது??? ஒவ்வொரு திருவிழாவிலும், நிகழ்ச்சிகளிலும் நாமும் வைத்து இருக்கிறோமே .... பேனர் வைத்தால் ஆபத்து என்று தெரிந்தும் நமது இல்ல நிகழ்ச்சிகள்,திருவிழாக்களில் வைக்கிறோமே ... அது தவறில்லையா??
வாகனம் ஓட்டுவது என்பது நமது பயண நேரத்தை குறைக்க கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கண்டுபிடிப்பு. அதை நாம் எவ்வாறு பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம் ?? அதி வேகம் , வண்டிகளை தேர் போல் பல வண்ண விளக்குகளை,கொண்டு அலங்கரித்தல் என்று செய்கிறோம். அதனால் பிறருக்கு ஏற்படும் அசவுகரியங்களை என்றாவது உணர்ந்து இருப்போமோ ??
குப்பைகளை கண்ட இடத்தில் நாம் கொட்டிவிட்டு அரசு சுற்று சூழலை பாதுகாக்க வில்லை என்று குறை சொல்வது நியாயமா ???
மது விற்பது அரசின் தவறு எனில் அதை வாங்கி அருந்துவது யாரின் தவறு???
மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் குடிப்பது அவரவர் விருப்பம்... ஆனால் மது பாட்டில்களை நிலத்தில் உடைப்பது ???? அந்த நிலத்தில் பல உயிர்கள் பயணிக்கும் .. சிறியவர் முதல் பெரியவர் வரை பலர் பயன்படுத்தும் பாதை ....
இன்று சுஜித்தின் மரணத்திற்கு வருந்தும் நாம் தெரிந்தோ தெரியாமலோ ஓவ்வொரு நாளும் யாரோ ஒருவரின் கஷ்டத்திற்கு காரணமாகிக்கொண்டு இருக்கிறோம்.
இது நாம் வாழும் சமூகம், நம் தலைமுறை வாழும் சமூகம் என்பதை உணர்ந்து இனியாவது சமூக பொறுப்புணர்வோடு நடப்போம்... இதுவே நாம் செய்யும் உண்மையான மரியாதையை ....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக