தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

வாழை இலை விருந்து




அறுவகைச் சுவை என்ன? அவற்றின் பயன் என்ன?

அறுவகைச் சுவைகள் இவையே:
1     இனிப்பு
2     கசப்பு
3     புளிப்பு
4     உவர்ப்பு
5     கார்ப்பு
6     துவர்ப்பு


இந்த சுவைகளின் பயன்களும் அவை அடங்கியுள்ள உணவுப் பொருட்களும் பார்க்கலாமா..!!!

இனிப்பு:
உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாததைக் கூட்டும்.
உணவுப் பொருட்கள்:
உருளை, காரட், கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானிய வகைகள், கரும்பு போன்ற தண்டு வகைகளிலும் இச்சுவை உள்ளது.


புளிப்பு:
இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாததைக் கூட்டும்.
உணவுப் பொருட்கள்:
எலுமிச்சை,, புளிச்சக் கீரை,, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் இந்த சுவை உள்ளது.


கசப்பு:
உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்தியைக் கூட்டுகிறது. சளியைக் கட்டுப்படுத்துகிறது.
உணவுப் பொருட்கள்:
பாகற்காய், சுண்டைக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை உள்ளது.


உவர்ப்பு:
உடம்பின் ஊக்கத்தைக் குறைத்து ஞாபகச்க்தியைக் கூட்டும்
உணவுப் பொருட்கள்:
கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய்,பீர்க்கங்காய் போன்றவற்றில் இந்த சுவை உள்ளது.

கார்ப்பு:
 உடலுக்கு சூட்டைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளைக் கூட்டவும், குறைக்கவும் செய்யும்.
உணவுப் பொருட்கள்:
வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.


துவர்ப்பு:
இரத்தம் உறைவதைத் தடுக்கவல்லது.
உணவுப் பொருட்கள்:

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்றவற்றில் இந்த சுவை உள்ளது.


ஒரெழுத்து ஒரு சொல்

ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல்அல்லது  ஒரேழுத்து ஒரு மொழி என்பர் தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்குத் தனியாக பொருள் உண்டு.

-----> எட்டு
-----> பசு
-----> கொடு, பறக்கும் பூச்சி
-----> சிவன்
-----> தசை, இறைச்சி
-----> அம்பு
-----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
-----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

நீண்ட ஆயுள் பெற வேண்டுமா..? இம்மொழிப் பேசுங்கள்….

ஒரு மொழியைப் பேசினால் ஆயுள் கூடும் என்று சொன்னால் அடித்துப் பிடித்தாவது அந்த மொழியைக் கற்று கொள்வோம் அல்லவா..! அப்படியானால் கீழே நான் குறிப்பிட்டுள்ள மொழியைப் பேசத்தொடங்குகள்.  நீண்ட ஆயுளைப் பெற ஒரு வழி இது….

உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகையில் 24 நிமிடங்கள், நாழிகைக்கு 360(15*24) மூச்சு எனச் சித்தர்கள் வகுத்துள்ளனைர். இதை வைத்தே வட்டத்தில் 360 பாகைகள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளைக்கு 21,600 மூச்சு ஓடுகிறது.  இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் உயிரும் மெய்யும் சேர்ந்து மொத்தம் 216 எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. 


ஒரு நாளைக்கு ஒரு மனிதன் 21,600 மூச்சு வீதம் செலவு செய்தால் 120 ஆண்டுகள் வரை உயிர் வாழலாம். உலகில் தன் கருத்தை வெளிப்படுத்த மட்டும் அல்லாமல் வாழும் ஆண்டுகளைக் கணக்கில் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரே மொழி நம் தமிழே…..!!!

தமிழ் என் தாய் மொழி என்பதால் தான் என்னவோ ஒவ்வொரு எழுத்தும் என் உயிராய் இருக்கிறது… இனி பெருமையுடன் சொல்வோம் ”தமிழ் என் மூச்சு” என்று…!!!





தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *