தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

மாவீரன் ராஜேந்திர சோழன்

தமிழ் நாட்டில் இன்னும் அந்நியனின் போர்திறனை வியந்து நம் ஒப்பற்ற அரசர்களின் திறனை மறந்தும் மறைத்தும் வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியமே…. கிரேக்க மன்னன் அலெக்சாண்டர், பிரான்சின் நெப்போலியன்,கலிங்க மன்னர் அசோகர்,முகலாய மன்னர் அக்பர் இவர்களை விட போர் திறன்,அரசியல்,சாணக்கியம்,கலை,இலக்கியம் என அனைத்திலும் சிறந்து விளங்கி வரலாற்றில் மறைந்த, வட இந்திய அரசால் வரலாற்றில் மறைக்கப்படும் ஒரு ஒப்பற்ற தேசங்களை ஆண்ட மன்னன்,இங்கு இருக்கும் ஒவ்வொருவனும் மார் தட்டிக் சொல்லிகொள்ள வேண்டிய ஒரு தமிழன்,இந்த 'இராஜேந்திர சோழன்'. இவனின் காலடிக்கு கூடத்தகுதி அற்றவர்களை மாவீர்ர்கள் என புகழ்ந்துகொண்டு 
இருக்கிறோம்….

1.இவ்வருடத்திலிருந்து சரியாக 1000வருடத்திற்கு முன்பு உலகின் கால் பகுதிகளை தன் காலடியில் வைத்திருந்த, மாமன்னன் இராஜேந்திர சோழன் ,சோழப் பேரரசின் தனி பெரும் மன்னனாக முடி சூட்ட பட்டான்.

2.இவனது போர் படையில் 12 லட்சம் வீரர்களில் இருந்து 14 லட்சம் வீரர்கள்,லட்சத்திற்கும் மேற்பட்ட குதிரைகள்,50,000 க்கும் மேற்பட்ட யானைகள் இருந்துள்ளன.இப் படை வீரர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள இந்திய ராணுவத்தின் எண்ணிக்கைக்கும்,அமெரிக்க ராணுவதின் எண்ணிக்கைக்கு இணையானது.கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் படையில் இருந்ததும் 1 லட்சத்துக்கும் குறைவானவர்களே.

3.தரை வழியாக,தற்போதுள்ள கேரளம்,ஆந்திரா,ஒரிசா,பீகார்,மேற்கு வங்கம,தெற்கு கர்நாடகம்,வங்க தேசம் ஆகிய பெயர்களை கொண்ட பகுதிகளையும், கடல் வழியாக, இன்றைய இந்தோனேசியா,மலேசியா, காலடியில் வைத்து இருந்தான்.சற்று இவரின் கடார படையெடுப்பின் கப்பல் படையை கற்பனை செய்து பாருங்கள் , எத்தனை எத்தனை ஆயிரம் மைல்கள் ,எத்தனை கப்பல்கள் ,எவ்வளவு மனித முயற்சி தேவை பட்டு இருக்கும் , மனித இயந்திரங்கள், பாய் மரக் கப்பல்கெளை கொண்டு இத்தனை நாடுகளை வென்ற உலகின் முதற் பெரும் மன்னனாவான்.


4.இராஜேந்திரன் தனி பெரும் மன்னாக முடி சூட்டி கொள்ளும் பொழுது அவனுக்கு வயது 50ஆக இருக்கும் என கருதப்படுகிறது.கப்பற் படைக்கு தலைமை ஏந்தி கடாரம்(இந்தோனேசியா) செல்லும் பொழுது இவனின் வயது 61.அறுபது வயதிலும் இளைஞனுக்கு உரிய மனித நிலையில் இருந்துள்ளார்.

5.கங்கை படையெடுப்பின் போது,கங்கை ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மறு முனைக்கு எப்படி செல்வது என்று புரியாமல் இருந்த போது,இவனது படையின் நூற்றுக்கணக்கான யானைகளை வரிசைப்படுத்தி, லட்ச கணக்கான வீரர்களை மறுமுனைக்கு கொண்டு சென்றனர்.

6.கங்கை படையெடுப்பில் வென்ற பிறகு,தோற்ற மன்னர்களின் தலையில் கங்கை நீர் குடங்களை வைத்து சோழ நாடு முடிய அவர்கள் நடந்தே கொண்டுவரப்பட்டனர்.இப்படையெடுப்பின் போது வங்கத்தை ஆண்ட புகழ் மிக்க மன்னன் 'மகிபாலனை' பெரும் போரிட்டு வென்ற பெருமைக்குரியது இவனின் படை.

7.கங்கையில கொண்ட புனித நீரினை கொண்டு தலை நகரான சோழபுரத்தை உருவாக்கியதால் அது 'கங்கை கொண்ட சோழபுரம் ' என்று அழைக்கப்பட்டது.பின்னாளில் அதுவே, அதிக ஆண்டுகள் (சுமார் 240 ஆண்டுகள் ) ஆண்ட சோழர்களின் தலை நகரானது.



8.கங்கை படையெடுப்பின் சந்தர்பத்தை பயன்படுத்தி பாண்டிய மன்னன் ஒரு பெரும் படையினை திரட்டி கொண்டு சோழ தேசம் நோக்கி வருகிறான்.இதனை அறிந்து ராஜாதிராஜன் அவர்களுடன் போர் புரிய ஒரு படையுடன் செல்கிறான்.சோழன் வருவதை கேள்வி பட்ட பாண்டியன் தனது மீன் கொடியை சுருட்டி கொண்டு ஓடினான்.இதுவே இந்நாளில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 'மீன்சுருட்டி' என்று அழைக்கப்படுகிறது.இது ஒரு செவிவழி செய்தியாகும்.

9.முகமது கஜினி அதிஉத்வேகத்துடன் வட இந்தியா நோக்கி படையெடுத்த கால கட்டம் அது.அப்போரில் வட இந்திய மன்னர்கள் ஒரு சேர நின்று கஜினியை தோற்கடித்தனர்.இப் போரில் ராஜேந்திர சோழன் ஒரு பெரும் படையை வட இந்திய மன்னர்களுக்கு நட்புரீதியாக அனுப்பி வைத்தான்.தோற்ற பிறகு முகமது கஜினி சென்ற இடம் வரலாற்று புகழ் பெற்ற 'சோமநாதபுரம்'.

10.பெரும் மனித உழைப்பை கொண்டு,நீர் பாசனத்திற்காக இந்த நாட்டிலே மிகப்பெரிய ஏரியை,25கிமீ நீளமும் 6.5 கிமீ அகலமும் கொண்ட ஏரியை உருவாக்கினான்.இதனை கங்கை கொண்டு புனித மாக்கப்பட்டதால் இது 'சோழகங்கம்'எனப்பட்டது.இது இப்பொது மண்ணால் மூடப்பட்டுள்ளது , 'பொன்னேரி' எனப்படுகிறது.


11.ராஜேந்திர சோழன் கட்டிய கோவில்களின் எண்ணிக்கை '32'.இதில் கங்கை கொண்ட சோழ புறம், ஈழம்,ஆந்திரா,கர்னாடக ஆகிய இடங்களில் கட்டிய கோவில்களும் அடங்கும்.

12.வாயுக் கடவுளுக்காக ஆந்திராவில் கட்டப்பட்டுள்ள புகழ் வாய்ந்த 'காளஹஸ்தி' திருக்கோயில் இவன் ஆட்சியில் தான் வளர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, முழுவடிவம் பெற்றது.

13.பொன்னியின் செல்வன் படிச்சவங்க எல்லாம் வந்தியத்தேவன ஒரு கதா பாத்திரமா நினைச்சி வாழ்ந்துஇருப்பீங்க.ஆம்,அவன்தான் இவனுடைய ஆட்சியிலும் முதன்மை தளபதியாக விளங்கியவன் தனது அத்தை கணவன் 'வல்லவராயன் வந்தியத்தேவன்'.

14.தனது மகன் ராஜாதிராஜனுக்கு இளம் வயதிலே முடி சூட்டப்பட்டு,தந்தையும்மகனும் '26' ஆண்டுகள் சேர்த்து ஆட்சி புரிந்தனர்.இவனது ஆட்சியில் பின்னாளில் ராஜாதிராஜனே பல போர்களுக்கு தலைமை புரிந்தான்.

15.வட இந்தியா,இலங்கை, பாரசீகம்,அரேபியம்,சீனா,ரோம்,கிழக்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளுடன் வணிக தொடர்பு வைத்து இருந்தான்.

16.கடார படை யெடுப்பினை பற்றி நிலவும் பல கருத்துகளில் ஒன்றாக, அங்கு வாழ்ந்து வணிகத்தில் ஈடுபட்டுவந்த தமிழர்களுக்கு விசய பேரரசால் வந்த இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்,தனது செல்வாக்கினை,தனது படை வலிமையை அங்கு காட்டும் பொருட்டு ,தனது படையெடுப்பினை நிகழ்த்தி வெற்றி கொண்டான்.இவன் வெற்றிக்கு பரிசளிக்கும் விதமாக கம்போடிய மன்னன் தமிழன் சூரிய வர்மன் ராஜேந்திர சோழனின் தாய் பெயரில் கம்போடியாவில் கோவிலை ஏற்படுத்தினான்.

17.ராஜேந்திரன் தன்னை சுற்றி அனைத்து போர் திறன்களும் அறிந்த கடும் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்ட ஒர் போர் குழுவினரை தன்னுடைய நலனுக்கும்,நாட்டின் நலனுக்கும் வைத்து இருந்தான்.

18.கங்கை கொண்ட சோழ புரத்தில் இருந்த இவனுடைய அரண்மனை மாளிகையின் பரப்பளவு 1.6 கிமீ.

19.மேலைசாளுக்கியர்களிடம் நிலவி வந்த கொடும்பகையினாளும், கீழை சாளுக்கியர் அவர்கள் வசம் செல்லாமல் இருப்பதற்கும் ,சாணக்கிய தனமாக கீழை சாளுக்கியரை தன் வசப்படுத்த தனது மகள் அங்கம்மாளை தனது தமக்கை மகன் கீழை சாளுக்கிய இளவரசன் ராஜ ராஜ அரியனிற்கு திருமணம் செய்து வைத்து ,பின்னாளில் அவனையே மன்னனாக்கி,மேலை சாளுக்கியருக்கு எதிராக மூன்று முறை பெரும்களம் கண்டு பெரும் வெற்றி கண்டான்.

20.அந்தமான் தீவில் மலை உச்சியில் ராஜேந்திரன் பற்றிய கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆராய்ந்தால் மேலும் தகவல்கள் கிடைக்கும்.

21.ராஜேந்திர சோழனின் கப்பற்படை திறனை பாராட்டி கவுரவிக்கும் பொருட்டு இந்திய கப்பற்படை பயிற்சி கப்பலுக்கு இந்திய அரசு TS Rajendra என்று பெயர் சூட்டியுள்ளது.



22.என்னதான் இது பொற்கால ஆட்சி என்று சொன்னாலும் குறைகள் இல்லாமல் இல்லை.இவனது ஆட்சியிலும் அடிமை முறை,தேவதாசி முறைகள் பின்பற்றபட்டது.சாதி கட்டமைப்புகள் இருந்தன,ஆனால் 'தீண்டாமை' இல்லை,பறையர்களுக்கும் நிலங்கள் சரியாக பங்கிட்டு கொடுக்கபட்டது.

23.கிபி 910,முதலாம் பராந்தக சோழன் பெரும் படையும் பாண்டிய மன்னன் இராச சிம்மனின் பெரும் படையும் 'வெள்ளூர்' எனும் இடத்தில் பெரும் போர் புரிந்தனர்.போர் என்றால் அப்படி ஒரு போர்,போரின் முடிவில் சோழன் பெரும் வெற்றி கொள்கின்றான்.பாண்டிய நாட்டை முடி சூட்டி கொள்ள வந்த சோழனுக்கு பெரும் அதிர்ச்சி,பாண்டியன் இராச சிம்மன் இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் போரில் உதவிய சிங்களமன்னனிடம் கொடுத்துவிட்டு சேர நாடுக்கு தப்பி ஓடி விட்டான்.கடுங்கோபமடைந்த பாராந்தக சோழன் ஒரு பெரும் படயினை இலங்கைக்கு அனுப்பி இலங்கையை வென்றான்.ஆனால் இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் கண்டறிய முடியவில்லை.ஆண்டுகள் கழிந்தன,மன்னர்கள் பலர் வந்து சென்றனர்,ஏன் ராஜராஜ சோழனால் கூட கைப்பற்ற முடியவில்லை.சரியாக 107 வருடம் கழித்து இராஜேந்திர சோழன் ஒரு மிகப்பெரும் படையுடன் இலங்கைக்கு சென்று ,முழு இலங்கையையும் துவம்சம் செய்து இலங்கை மன்னன் 5ம் மஹிந்தனை வென்று இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் கைப்பற்றி, சோழ நாடு வந்த வேந்தன்,இந்த சோழன்.

24.இராஜேந்திர சோழனும் சைவ நெறியையே பின்பற்றினான்.தன்னுடைய ஆட்சியில் பிற சமயங்களுக்கும் அதே முக்கியத்துவம் கொடுத்து வந்தான்.கங்கை முடிய படை எடுத்து வென்றாலும் எந்த நேரத்திலும் தான் சார்ந்த சமயத்தையோ,மொழியையோ யார் மீதும் தினிக்கவில்லை.

25.இராஜேந்திரன் இறந்தவுடன்,அவனிடம் இருந்த தீராத அன்பினால் அவன் மனைவியுள் ஒருத்தியான வீரமாதேவியும் உடன் இறந்தால்.பின்னாளில் அந்த இடத்தில் நீர் பந்தலை அமைத்த அவளின் சகோதரன் சேதுராமன் மதுராந்தகன் அவ்வழியில் செல்வோர்க்கு நீரிணை கொடுத்து வந்தான்.


பண்டைத்தமிழரின் இசைக்கருவிகள்.

பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய இசைக்கருவிகள் இவையே….

தோல் கருவி

நரம்புக்கருவி

துளைக்கருவி

கஞ்சக்கருவி


பழங்கால இன்னிசைக் கச்சேரி.
இன்னியம் - இனிய இசை ஒலி
பல்லியம் - பல இசைக்கருவி
அந்தரப்பல்லியம் - வானில் இசைக்கும் ஒலி

இசையால் பெயர் பெற்ற தமிழன்.
பாணர் -  பண் இசைப்பவர்


சிறுபாணர் - சீறியாழை இசைப்பவர்
பெரும்பாணர் -  பேரியாழை இசைப்பவர்
பறையர் - பறை இசைப்பவர்

துடியர் -  துடி இசைப்பவர்
கடம்பர் - கடம் இசைப்பவர்
இயவர் - இசைப்பவர்
கூத்தர்  - கூத்தாடுவதால்


வயிரியர் - வயிர் என்னும் கருவியை இசைப்பவர்

நிலவேம்பின் மருத்துவ குணங்கள்:-

தலை வலி நீங்க:
அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை இரண்டு வேளையும் பருகி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறைந்து தும்மல் இருமல் போன்ற பாதிப்புகள் சரியாகும்.
குழந்தைகளுக்கு :
வயிற்று பொருமல் மற்றும் கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்பின் இலையை சாறெடுத்து கொதிக்கவைத்து ஆறவைத்து தினமும் 5 மிலி கொடுத்து வந்தால் வயிற்று பொருமல் சரியாகும்.
மயக்கம் தீர:
சிலருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தொடர்ந்து நிலவேம்பு கஷாயத்தை அருந்தி வந்தால் சரியாகிவிடும்.



குடல் பூச்சி நீங்க:
வயிற்று பூச்சிகள் உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடலின் வலிமை குறைந்து நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றோம். வயிற்று பூச்சிகள் நீங்க நிலவேம்பு நீரை நீரில் கொதிக்கவைத்து காஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேரத்தில் அருந்தி வந்தால் வயிற்று பூச்சி நீங்கும்.
அஜீரணம் சரியாக:
நிலவேம்பு (பூ, காய்) காய்ந்தது 16 கிராம், வசம்புத்தூள் 4 கிராம், சதக்குப்பை விதைத்தூள் 4 கிராம், கோரைக்கிழங்கு தூள் 17 கிராம் இவற்றை ஒன்றாக சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு அதை 1 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி எடுத்து தினமும் அருந்தி வந்தால் உடல் வலு பெறும் மேலும் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.
உடல் வலு பெற:
உடல் வலிமையின்றி மெலிந்துகாணப்படுபவர்கள் நிலவேம்பின் பூ மற்றும் காய்களை கசாயமாக செய்து சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு வலிமை அடையும்.
விஷ காய்ச்சல் குணமாக:
நிலவேம்பு 15 கிராம், கிக்சிலத் தோல் 5 கிராம், கொத்துமல்லி 5 கிராம், இவற்றை ஒன்றாக சேர்த்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து. அப்படியே மூடி ஒரு மணி நேரத் கழித்து வடிகட்டி பின்பு நான் ஒன்றுக்கு 30 மிலி என மூன்று வேளை குடித்து வந்தால் காய்ச்சல் சரியாகும்.

பசியை தூண்ட:
பசியால் அவதிப்படுபவர்களை காட்டிலும் பசியின்றி அவதிப்படுபவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுகள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகின்றது. இவர்கள் நிலவேம்பு பூ, மற்றும் காய் பகுதியை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதை காலையில் மட்டும் கஷாயம் செய்து குடித்துவந்தால் பசி நன்றாக ஏற்படும். அதே போன்று பித்தம் சார்ந்த வாந்தி, மயக்கம் போன்ற பல பிரச்னைகளுக்கு இந்த பாதிப்பில் இருந்து விடுபட இந்த கஷாயம் உதவுகிறது.


சில ஊர்களின் முழுமையான மிக பழைய‌த் தமிழ் பெயர்கள்

குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்படுகிறது
உதகமண்டலம் அதாவது ஊட்டி தொடக்க கால பெயர் ஒத்தை கால் மண்டபம்,ஒத்தை கால் மாந்தை இந்த பெயர்தான் உதகமண்டலம் என்று மாறியுள்ளது


ஒகேநக்கலின் உண்மையான பெயர் உகுநீர்க்கல்,புகைநற்கல் என்பதேயாகும்
விருதாச்சலம்(வடமொழி) என்ற ஊரின் உண்மையான பெயர் முதுகுன்றம்(தமிழ்) என்பதே
வேதாரண்யம் என்ற ஊரின் உண்மையான பெயர் ""திருமறைக்காடு""
வேதாரண்யம் என்பது தமிழ் சொல் அல்ல
மதுரை என்பது மதிரை என்ற சொல்லில் இருந்து வந்தது. மதி என்றால் நிலவு , பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள் அதான் மதுரை என்று பெயரிட்டனர்,
குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை.
தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது


பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது
வென்க‌ல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது
செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது
எருமையூர் என்ற தமிழ் பெயர் தான் இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது ,எருமை என்பதை வடமொழியில் மகிசம் என்று சொல்வார்கள்.எனவே தமிழ் பெயரை எடுத்துவிட்டு மகிசூர் என்று மாற்றி பின்னது அது மைசூர் என்றானது
ஏர்க்காடு
சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். அது சிதைந்து ஏர்க்காடு என வழங்குகின்றது.
திருகோணமலை
இறையனார் களவியலுரையில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் கொலு வீற்றிருந்த காலத்தில் பாண்டியரின் தலைநகராக இருந்த கபாடபுரம்' என்று குறிக்கப் பெறுவது இன்றும் தமிழீழத்தில் உள்ள இயற்கைத் துறைமுக நகரான திருகோணமலைதான் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குடிதனைப் பெருக்கிக்
கொடிதனை நெருக்கி வாழும்
கோணமாமலை....
என்று தேவாரப் பாடல் திருகோண மலையைச் சிறப்பிப்பதும் இதை உறுதிப்படுத்தும்.
 திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்
நீலகிரி என்னும் மலையில் இப்பொழுது குன்னூர் என வழங்குவது குன்றூரேயாகும்
நெல்லை நாட்டில் பொதிய மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய ஊர் ஒன்று, சிவசைலம் என்று பெயர் பெற்றுள்ளது.
வானமா மலை என்னும் நாங்குனேரிக்குத் தோத்தாத்திரி என்ற வடமொழிப் பெயரும் உண்டு.
தமிழ்நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களங்காடும், பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும். ஆத்தி மாலை அணிந்த சோழ மன்னனை ஆரங்கண்ணிச் சோழன்என்று சிலப்பதிகாரப் பதிகம் குறிக்கின்றது. அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.


மலையின் முடியைக் கோடு என்னும் சொல் குறிப்பதாகும். சேலம் நாட்டிலுள்ள திருச்செங்கோடு சாலப்பழமை வாய்ந்தது.

அழகும் ஆரோக்கியமும்....

இன்றைய நவீன உலகில், அழகிற்கும் மருத்துவத்திற்கும் தான் நாம் ஈட்டும் பெரும்பாலான பணத்தை செலவிடுகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் எந்த செலவும் இல்லாமல் தம்மிடம் இருந்த பொருள்களைக்கொண்டே தம்மை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொண்டனர்.  அவர்கள் நமக்களித்த பல குறிப்புகளில் சில இதோ….
கட்டிகள் உடைய
மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும். 
பேன் தொல்லை நீங்க
வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும். 
மேனி பளபளப்பு பெற
ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.
தும்மல் வராமல் இருக்க
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது. 
கரும்புள்ளி மறைய
எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.


தொண்டை கரகரப்பு நீங்க
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.
கருத்தரிக்க 
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.


இருமல் சளி குணமாக
சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

நினைவாற்றலை அதிகரிக்க சில எளிய வழிகள்....

உடலில் உள்ள எந்த உறுப்பையும்விட அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்வது மூளைதான். தேவையான சத்துணவு, தேவையான அளவு கிடைக்காதபோது மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. அதனால் மூளையின் செல்கள் அழிந்துவிடுதல், ‘அல்ஸீமர்ஸ்என்ற ஞாபகமறதி நோய், ஞாபகச் சக்தியை - ஒருமுகக் கவனத்துடன் செயல்படும் ஆற்றலை இழப்பது, பலவீனம், குழப்பம், நோய் தாக்குதல் முதலியவை ஏற்படுகின்றன.

மூளைக்கு எப்போதும் ஞாபகசக்தி இருக்க வேண்டும். அதற்குக் கொழுப்பு, வெண்ணெய், நெய் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் கொழுப்பு தீங்கானது. மூளைக்கு உதவும் சரியான உணவைத் தேர்ந்தெடுக்க ஓர் எளிய வழி உண்டு. ஒளிரும் நிறத்தில் இருக்கும் உணவு வகைகள் மூளையின் பசியைப் போக்கும் முக்கிய உணவு வகைகளாகும். ஏனென்றால், இந்த உணவு வகைகளில் போதுமான அளவு வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை உள்ளன.


ஞாபகசக்தியை அதிகப்படுத்த உண்ண வேண்டியவைகள்:
ஞாபகசக்தி குறைவாக இருப்பவர்கள் ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி பழம், தக்காளி, முலாம் பழம், பேரீச்சம்பழம், காரட், அன்னாசி, காலி பிளவர், முட்டை கோஸ், பசலைக் கீரை, கொத்துமல்லி, வல்லாரை, முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, பச்சைப் பட்டாணி, பாசிப் பருப்பு, கொண்டைக் கடலை, பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ், சோயா எண்ணெய், பால், தயிர், அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகள் புதிய ரத்தச் செல்கள் உருவாகவும் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகின்றன.

பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ் போன்றவற்றை அதிக அளவு உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நம் உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற உப்பு வகைகளைச் சமன் செய்து உடலைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.


ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படத் தண்டுக் கீரை, கொண்டைக் கடலை முதலியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால், தயிர், சத்துள்ள உணவு வகைகளால் அதிக அளவு ஆற்றல் கிடைக்கிறது. அதனால் சோம்பேறித்தனம் நீங்கிச் சுறுசுறுப்பு அதிகமாகிறது.

மூளை சுறுசுறுப்பை அதிகரிக்கும் உணவு வகைகள்:

அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகளுடன் இரும்புச் சத்து நிறைந்துள்ள பேரீச்சம் பழம், பட்டாணி போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்வதால் கோபம், பதற்றம் போன்ற உணர்ச்சிகள் மெல்ல மெல்லக் குறைந்து நரம்பு மண்டலம் அமைதியாகி மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.



மாதமொரு முறை கோதுமை அல்வா சாப்பிடுவதாலும், இயற்கை இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதாலும் ஞாபகச் சக்தி அதிகரிக்கிறது. சிந்தனை தெளிவும் உண்டாகிறது.

திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, காரட், செர்ரி பழம் முதலியவை மூளை சுறுசுறுப்பாக இருக்க நல்ல உணவு வகைகளாகும். மூளையின் செயல்திறன் பாதிக்காதபடி இவை பராமரித்துப் பாதுகாக்கின்றன.


நினைவாற்றலை அதிகரிக்கும் வெள்ளை பூண்டு

மனத்தை அமைதிப்படுத்தித் தன்னம்பிக்கையை உணர்த்துகிறது வெள்ளை பூண்டு, மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் வெள்ளைப் பூண்டு பாதுகாக்கிறது.

மீன், மீன் எண்ணெய், மீன் மாத்திரை ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது

மூளையில் ஏற்படும் ஓட்டையைத் தையல்காரர் போல் சிறப்பாகத் தைத்து மூளையை ஒழுங்காகச் செயல்படுத்துபவை மீனும், மீன் எண்ணெயும், மீன் மாத்திரையும் ஆகும்.

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *