ஆசிரியர்: பத்தையும் எட்டையும்
கூட்டினால்
என்ன
வரும்..?
மாணவர்: தெரியலயே டீச்சர்!!!
ஆசிரியர்: இதுக் கூடவா
தெரியல
பத்து
தோப்புக்
கரணம்
போடு..
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளி வாசலில் அடிக்கடி கேட்கப்பட்ட வார்த்தைகள் இவை. ஆனால் நாகரிக வளர்ச்சியால் சிறிது காலம் மறந்துபோன இப்பயிற்சி இன்று மீண்டும் உயிர் பெற்று இருக்கிறது. தோப்புக் கரணம் முறையாக போடும் வழிகளையும் பயன்களையும் பார்ப்போமா..?
முறையாக தோப்புக்கரணம் போடுவது எப்படி?
1.
தினமும் சூரியன் எழும் நேரத்தில் கிழக்குத்திசையை நோக்கி நின்று செய்ய
வேண்டும்.
2.
நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும்.
3.
கால்களின் இடைவெளி தோள்பட்டையின் அகலத்திற்கு இருக்கு வேண்டும்.
4.
முதலில் இடது
கையால் வலது காது
மடலையும் பிறகு வலது
கையால் இடது காது
மடலையும் பிடிக்க வேண்டும்.
5.
நாக்கை மேலண்ணத்தோடு ஒட்டும்படி வைக்க
வேண்டும்.
6.
கைகளின் கட்டை
விரல்
காது
மடலின் பின் புறத்தில் இருக்க வேண்டும்.
7.
மூக்கின் வழியாக மூச்சை உள்ளே
இழுத்து மெதுவாக கீழே
அமர
வேண்டும். (நாற்காலியில் அமர்வது போன்று)
8.
கீழே சென்றவுடன் சில நொடிகள் மூச்சி இழுத்து பிடித்து பின்
மெதுவாக மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மேலே எழ
வேண்டும்.
தோப்புக்கரணம் செய்வதனால் என்ன பயன்?
1.
மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் செல்லும் உயிர் சக்தியின் அளவை அதிகரிக்கிறது.
2.
மூளைக்கான அக்கு
பஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுவதால், மூளையின் வேகம் அதிகரிக்கிறது.
3. தொடர்ந்து செய்வதன் மூலம் கவனக் குறைவு நீங்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை படிக்காததற்கு தண்டனை என்றால் அது தோப்புக்கரணம் தான். ஆனால் இன்றோ அடிப்பதும் அதிக வீட்டுப் பாடங்களைக் கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. நம் முன்னோர்கள் எந்த அறிவியல் தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கவனக் குறைவைக் சரி செய்ய கண்டுப் பிடித்த முறை இன்று மேலை நாட்டவரால் ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டவுடன் எந்த சலனமும் இன்றி ஏற்றுக்கொண்டுவிட்டோம். நம் முன்னோர்கள் எதையும் காரணமின்றி செய்யவில்லை. நாகரிகம் என்ற பெயரில் நம்மை அறியாமலேயே நம் கலாச்சாரத்தையும் நல்ல பழக்கவழக்கங்களையும் அழித்துக்கொண்டு இருக்கிறோம். இதையும் மேலை நாட்டவன் ஆராய்ந்து சொன்னால் தான் உணர்வோமோ…!!!!???