தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

என் கலாச்சாரத்தில் தலையிட அதிகாரம் கொடுத்தவர் யார்????? ஜல்லிக்கட்டு எங்கள் உரிமை!!!!


ஜல்லிக்கட்டு!!!!! எம் பாரம்பரியம். கலாச்சாரம். யாரோ வழக்குத் தொடர்ந்தார்கள் என தடைப்பட்டுக் கிடக்கிறது!!! இந்த உலகில் ஒவொரு இனத்திற்கும் ஒரு பாரம்பரியம் பழக்க வழக்கம் கலாச்சாரம் என்று இருக்கிறது. அதில் தலையிடவும் மாற்றவும் எவருக்கும் அதிகாரம் இல்லை. அது அத்துமீறல்!!! நாங்கள் காளைகளை கடவுளாக வழிபடுகிறோம். நங்கள் ஜல்லிக்கட்டிற்கு ஒரு அர்த்தம் உள்ளது.



உலகம் முழுதும் சேவல் சண்டை, காளை சண்டை, நாய்கள் சண்டை என் பல்வேறு விளையாட்டுக்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் ஏதேனும் ஒரு விலங்கு இறந்தால் மட்டுமே வெற்றி உறுதி செய்யப்படும். ஆனால் நம் பாரம்பரிய ஜல்லிக்கட்டு காளைகளை கொள்வதல்ல. மாறாக பசுக்களுக்காக நடத்தப்படும் சுயம்வரமே!!!!!! வழக்குத் தொடர்ந்தவர்களுக்கு இவை தெரியாதோ!!!!



795 மில்லியன் மக்கள் உணவின்றி தவிக்க உலகின் ஒரு மூலையில் தக்காளி திருவிழா என உணவை வீணாக்கும் அவர்களிடம் போய் சொல்லித் தடை வாங்குங்கள்.


ஹோலி என சுற்று சூழலை மசுப்படுத்துக்கிறிர்களே!! அதை தடை செய்யுங்கள்.!!!

உடலுக்கு தீங்கு தரும் எனத் தெரிந்தும் COCK, PEPSI, LAYS ……………………. என அனுமதித்து இருப்பதை தடை செய்யுங்கள். மனித உயிர்கள் விலங்கின் உயிரை விட உயர்ந்தது அல்லவா!!!!

நாட்டு மாடுகளை தவிர்த்து ஜெர்சி வகை மாடுகளை இறக்குமதி செய்வதை தடுக்க வழி செய்யுங்கள்!!!!

ஜல்லிகட்டை அலைபேசியில் விளையாடிக்கொள்ளுங்கள் என சொல்லும் நீதிபதிகளே!!!! உங்கள் கலாச்சார விளையாட்டையோ இல்லை கலச்சாரத்தையோ  அலைபேசியில் விளையாட நீங்கள் தயாரா.?????

ஒருவேளை, நாளை இந்தியக் கலாச்சாரத்தில் பெரிய பிழை உள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி என்பது மனித உரிமை மீறல். அதை மாற்ற வேண்டும் என வழக்குத் தொடர்ந்தால் அதற்கும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்து அவரக்கள் சொல்வது சரி என்று ஒத்துக்கொள்வீர்களா????

இனிமேலாவது புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
ஜல்லிக்கட்டு
எங்கள் கலாச்சாரம்!!!!
எங்கள் வீரத்தின் அடையாளம்!!!
எங்கள் உரிமை!!!!
எங்கள் மரபு!!!!
எங்கள் பண்பாடு!!!
நங்கள் தமிழர்கள் என்பதால் தான் உத்தரவுகளை மதித்துக்கொண்டிருக்கிறோம். இதனால் நங்கள் கோழைகள் அல்ல. இனியும் எங்கள் மனதை புண் படுத்துவதை விடுத்து எங்கள் கலாச்சாரத்தோடு வாழ விடுங்கள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *