வேறு மொழிகளில் இல்லாத பெருமை தமிழுக்கு உண்டு. வேறு எந்த
மொழிகளிலும் மொழியை பேசுவோரும் தத்தம் மொழியைத் தன் பெயராய் வைத்துக்கொள்வதில்லை. ஆனால் தமிழர்கள் – தமிழ்ச்செல்வன், தமிழரசி, தமிழ்ச்செல்வி, தமிழாயினி, தமிழன்பன், தமிழரசன், தமிழ், தமிழ் நிலா, தமிழச்சி,
தமிழிசை, செந்தமிழ் என நம் மொழியின் பெயரைத் தம் பெயராகக் கொண்டுள்ளனர்.
தமிழில்
நாம் பேசும் போது பொதுவாக செய்யும் பிழைகள் ழகர, லகர, ளகர உச்சரிப்பு ஆகும். அவற்றை
எப்படி உச்சரிக்க வேண்டும் என்பது படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.
தமிழில் ஒரு வாக்கியத்தை எப்படி எழுதினாலும் பேசினாலும் அதன்
பொருள் மாறாது. இது தமிழுக்கே உண்டான சிறப்பு.
உதாரணம்:
ராமன் ராவணனைக் கொன்றான்
ராவணனை ராமன் கொன்றான்
கொன்றான் ராவணனை ராமன்
ராவணனைக் கொன்றான் ராமன்
கொன்றான் ராமன் ராவணனை
இந்த வாக்கியத்தில் எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அர்த்தம்
மாறுவதில்லை.
RAMA KILLS RAVANA
RAVANA KILLS RAMA
இதில் சொல்லை மாற்றினால் அர்த்தமே மாறிவிடும்.
தமிழ் சொற்கள் அனைத்தும் தொண்டை மற்றும் நாவினால் பேசப்படுபவை.
வயிற்றிலிருந்து கத்தும் சொற்கள் இல்லை. இங்குதான் மொழியின் இனிமை அடங்கி இருக்கிறது. பேசும்போதே
கத்துவதெல்லாம் இல்லாமல் மென்மையாக பேசி இனித்தால்தான் அது இனிய மொழியாகும்.
பேசுவதும், எழுதுவதும், வாக்கியங்களும், வார்த்தைகளும், சொற்களும் ஒன்றேதான். ஒவ்வொரு சொல்லாய்ச் சொன்னாலும் அர்த்தம் மாறுவதில்லை.
உதாரணம்:
அம்மா – என்ற சொல்லை ஒவ்வொரு
சொல்லாக அ-ம்-மா என்று சொன்னாலும் பொருள் மாறுவதில்லை. ஆனால் இதையே
MOTHER என்பதை ஒவ்வொரு சொல்லாய் சொன்னால் எம் – ஓ – டி - ஹச்
- ஈ - ஆர். எந்த பொருளையும் தருவதில்லை.
உலகில் எந்த மொழியிலும் இல்லாத அளவில் தமிழில் மட்டுமே அதிகபடியான சொற்கள் உள்ளன. தமிழி மொத்தம் எத்தனை சொற்கள் உள்ளன தெரியுமா…? 500,000 சொற்கள் உள்ளன. சொற்பொருளையும் கணக்கில் கொண்டால் சுமார் 750,000 சொற்கள் தமிழில் உள்ளன. 37 ஆண்டுகால உழைப்பின் பயனாக 31 தொகுதிகளைக் கொண்ட தமிழ் அகராதி, பாவணரால் ஆரம்பிக்கப்பட்டு பேராசிரியர் மதிவாணன் தலைமையில் முற்றுப்பெற்றுள்ளது.
என்னே
தமிழின் பெருமை….!!!
தமிழை மறப்பவன் தாயை மறப்பவன்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக