நம் குடும்பம் நல்ல குடும்பமாக அமைய நாம் கடைப்பிடிக்க வேண்டியவைகள்…
1. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம், அன்பு ஆகிய நான்கையும் கடைப்பிடிக்க
வேண்டும்.
2. நம் குடும்பத்தினர்
செய்த குற்றங்களை அன்பாக சுட்டிக் காட்டி, அவற்றை மறந்து மகிழ்வோடு இருக்க வேண்டும்.
3. நாம் பெற்ற ஞானத்தை நம்
குடும்பத்தை அன்பாக நட்த்துவதிலே வெளிப்படுத்த வேண்டும்.
4. கணவன் - மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல
முடியாது.
5. குடும்பத்தை நம் அறிவைக்
கொண்டு நிர்வாகம் செய்ய வேண்டும்.
6. வரவைக் கணக்கில்
கொண்டு செலவு செய்ய வேண்டும்.
7. குடும்ப முன்னேற்றத்தில்
குடும்ப உறுப்பினர் அனைவரின் பங்கும் இருக்க வேண்டும்.
8. கணவனும் மனைவியும்
ஒளிவு மறைவின்றி இருக்க வேண்டும்.
9. தன் வாழ்க்கைத்
துணையைக் குறைக் கூற அந்நியர்க்கு உரிமை கொடுக்கக் கூடாது.
10. நல்ல குடும்பத்தினால் தான் சமூகத்திற்கு
நல்ல மக்களைக் கொடுக்க முடியும்.