தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

புதன், 6 ஆகஸ்ட், 2014

மூலமொழிகள்..

உலகில் இருக்கும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6809
இவற்றில் 700 மொழிகளில் மட்டும்தான் எழுதவும் பேசவும் முடியும்.
சொந்த வரிவடிவத்தில் எழுதப்படும் மொழிகள் 100 மட்டுமே.
இம்மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாக திகழ்பவை 6 மொழிகளே.
அவற்றிலும் இன்று வழக்கில் இருப்பவை 2 மட்டுமே
அதில் ஒன்று நம் மொழி என்பது பெருமையே…
ஆனால் நாம் தான் தமிழில் பேசத் தயங்குகின்றோம்.

மூலமொழிகள் இவையே:
1.  எபிரேயம் – பேச்சு வழக்கில் இல்லை
2.  கிரேக்கம் – பேச்சு வழக்கில் இல்லை
3.  இலத்தீன் – பேச்சு வழக்கில் இல்லை
4.  சமஸ்கிருதம் - – பேச்சு வழக்கில் இல்லை
5.  தமிழ்
6.  சீனம்


தயக்கம் மறப்போம்! தாய் மொழிப் பேசுவோம்!!

தோப்புக்கரணம் நம் முன்னோர்கள் தந்த வரம்..

ஆசிரியர்: பத்தையும் எட்டையும் கூட்டினால் என்ன வரும்..?
மாணவர்: தெரியலயே டீச்சர்!!!
ஆசிரியர்: இதுக் கூடவா தெரியல பத்து தோப்புக் கரணம் போடு..

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளி வாசலில் அடிக்கடி கேட்கப்பட்ட வார்த்தைகள் இவை. ஆனால் நாகரிக வளர்ச்சியால் சிறிது காலம் மறந்துபோன இப்பயிற்சி இன்று மீண்டும் உயிர் பெற்று இருக்கிறது. தோப்புக் கரணம் முறையாக போடும் வழிகளையும் பயன்களையும் பார்ப்போமா..?

முறையாக தோப்புக்கரணம் போடுவது எப்படி?

1.   தினமும் சூரியன் எழும் நேரத்தில் கிழக்குத்திசையை நோக்கி நின்று செய்ய வேண்டும்.
2.   நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும்.
3.   கால்களின் இடைவெளி தோள்பட்டையின் அகலத்திற்கு இருக்கு வேண்டும்.
4.   முதலில் இடது கையால் வலது காது மடலையும் பிறகு வலது கையால் இடது காது மடலையும் பிடிக்க வேண்டும்.
5.   நாக்கை மேலண்ணத்தோடு ஒட்டும்படி வைக்க வேண்டும்.
6.   கைகளின் கட்டை விரல் காது மடலின் பின் புறத்தில் இருக்க வேண்டும்.
7.   மூக்கின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக கீழே அமர வேண்டும். (நாற்காலியில் அமர்வது போன்று)
8.   கீழே சென்றவுடன் சில நொடிகள் மூச்சி இழுத்து பிடித்து பின் மெதுவாக மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மேலே எழ வேண்டும்.



தோப்புக்கரணம் செய்வதனால் என்ன பயன்?

1.   மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் செல்லும் உயிர் சக்தியின் அளவை அதிகரிக்கிறது.
2.   மூளைக்கான அக்கு பஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுவதால், மூளையின் வேகம் அதிகரிக்கிறது.
                  3.  தொடர்ந்து செய்வதன் மூலம் கவனக் குறைவு நீங்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை படிக்காததற்கு தண்டனை என்றால் அது தோப்புக்கரணம் தான். ஆனால் இன்றோ அடிப்பதும் அதிக வீட்டுப் பாடங்களைக் கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. நம் முன்னோர்கள் எந்த அறிவியல் தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கவனக் குறைவைக் சரி செய்ய கண்டுப் பிடித்த முறை இன்று மேலை நாட்டவரால் ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டவுடன் எந்த சலனமும் இன்றி ஏற்றுக்கொண்டுவிட்டோம். நம் முன்னோர்கள் எதையும் காரணமின்றி செய்யவில்லை. நாகரிகம் என்ற பெயரில் நம்மை அறியாமலேயே நம் கலாச்சாரத்தையும் நல்ல பழக்கவழக்கங்களையும் அழித்துக்கொண்டு இருக்கிறோம். இதையும் மேலை நாட்டவன் ஆராய்ந்து சொன்னால் தான் உணர்வோமோ…!!!!???

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

நல்லதொருக் குடும்பம் பல்கலைக் கழகம்...

நம் குடும்பம் நல்ல குடும்பமாக அமைய நாம் கடைப்பிடிக்க வேண்டியவைகள்… 

1. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம், அன்பு ஆகிய நான்கையும் கடைப்பிடிக்க வேண்டும்.
2. நம் குடும்பத்தினர் செய்த குற்றங்களை அன்பாக சுட்டிக் காட்டி, அவற்றை மறந்து மகிழ்வோடு இருக்க வேண்டும்.
3. நாம் பெற்ற ஞானத்தை  நம் குடும்பத்தை அன்பாக நட்த்துவதிலே வெளிப்படுத்த வேண்டும்.
4. கணவன் - மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.
5. குடும்பத்தை நம் அறிவைக் கொண்டு நிர்வாகம் செய்ய வேண்டும்.
6. வரவைக் கணக்கில் கொண்டு செலவு செய்ய வேண்டும்.
7. குடும்ப முன்னேற்றத்தில் குடும்ப உறுப்பினர் அனைவரின் பங்கும் இருக்க வேண்டும்.
8. கணவனும் மனைவியும் ஒளிவு மறைவின்றி இருக்க வேண்டும்.
9. தன் வாழ்க்கைத் துணையைக் குறைக் கூற அந்நியர்க்கு உரிமை கொடுக்கக் கூடாது.
10. நல்ல குடும்பத்தினால் தான் சமூகத்திற்கு நல்ல மக்களைக் கொடுக்க முடியும்.

சனி, 2 ஆகஸ்ட், 2014

பழமொழிகளின் உண்மை வரிகளும் பொருளும்...

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு

உண்மைப் பொருள்
: உற்றார், உறவீனர், நண்பர்கள் என ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு என்பதாகும்.
2.படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்

உண்மைப் பொருள்:  படிச்சவன் பாட்டை கொடுத்தான், எழுதுனவன் ஏட்டை கொடுத்தான்.

3.ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்

உண்மைப் பொருள்
: இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை) ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்.
4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு 

உண்மைப் பொருள்
:  சூடு அல்ல சுவடு சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது. ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்.
5.
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்
உண்மைப் பொருள்
: அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்
6. எறும்பு தின்றால் கண்கள் நன்றாக தெரியும்

உண்மைப் பொருள்:  எறும்பு தின்னி என்னும் உயிரினத்திற்கு கண்கள் நன்றாக தெரியும் என்பதே உண்மை.
 7. அடியாத மாடு படியாத.
உண்மைப் பொருள்: உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற) செய்ய முடியும் என்பது தான்.

8. கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி
 உண்மைப் பொருள்:  (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவேஇ (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது ஆகும்

9.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
உண்மைப் பொருள்: மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.

10. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

உண்மைப் பொருள்: உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில் பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு.

11. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

 உண்மைப் பொருள்: சிற்பி வடித்த அழகிய நாய் சிற்பத்தைக் கண்ட ஒருவன் சொன்ன பதில் 'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்'. அதாவது அந்த சிற்பத்தை நாயாகப் பார்த்தால் தெரியவில்லை. கல்லாகப் பார்த்தால் நாய் தெரியவில்லை.

12.
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை

உண்மைப் பொருள்: போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.

13. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
உண்மைப் பொருள்: இதன் அர்த்தம்இ ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.

14. சேலை கட்டிய மாதரை நம்பாதே
உண்மைப் பொருள்: சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள்.
சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும்போது  கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மை பொருள்.

15. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

உண்மைப் பொருள்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே. அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர்) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *