தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

சனி, 2 ஆகஸ்ட், 2014

பழமொழிகளின் உண்மை வரிகளும் பொருளும்...

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு

உண்மைப் பொருள்
: உற்றார், உறவீனர், நண்பர்கள் என ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு என்பதாகும்.
2.படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்

உண்மைப் பொருள்:  படிச்சவன் பாட்டை கொடுத்தான், எழுதுனவன் ஏட்டை கொடுத்தான்.

3.ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்

உண்மைப் பொருள்
: இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை) ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்.
4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு 

உண்மைப் பொருள்
:  சூடு அல்ல சுவடு சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது. ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்.
5.
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்
உண்மைப் பொருள்
: அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்
6. எறும்பு தின்றால் கண்கள் நன்றாக தெரியும்

உண்மைப் பொருள்:  எறும்பு தின்னி என்னும் உயிரினத்திற்கு கண்கள் நன்றாக தெரியும் என்பதே உண்மை.
 7. அடியாத மாடு படியாத.
உண்மைப் பொருள்: உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற) செய்ய முடியும் என்பது தான்.

8. கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி
 உண்மைப் பொருள்:  (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவேஇ (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது ஆகும்

9.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
உண்மைப் பொருள்: மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.

10. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

உண்மைப் பொருள்: உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில் பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு.

11. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

 உண்மைப் பொருள்: சிற்பி வடித்த அழகிய நாய் சிற்பத்தைக் கண்ட ஒருவன் சொன்ன பதில் 'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்'. அதாவது அந்த சிற்பத்தை நாயாகப் பார்த்தால் தெரியவில்லை. கல்லாகப் பார்த்தால் நாய் தெரியவில்லை.

12.
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை

உண்மைப் பொருள்: போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.

13. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
உண்மைப் பொருள்: இதன் அர்த்தம்இ ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.

14. சேலை கட்டிய மாதரை நம்பாதே
உண்மைப் பொருள்: சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள்.
சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும்போது  கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மை பொருள்.

15. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

உண்மைப் பொருள்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே. அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர்) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *