தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

நீண்ட ஆயுள் பெற வேண்டுமா..? இம்மொழிப் பேசுங்கள்….

ஒரு மொழியைப் பேசினால் ஆயுள் கூடும் என்று சொன்னால் அடித்துப் பிடித்தாவது அந்த மொழியைக் கற்று கொள்வோம் அல்லவா..! அப்படியானால் கீழே நான் குறிப்பிட்டுள்ள மொழியைப் பேசத்தொடங்குகள்.  நீண்ட ஆயுளைப் பெற ஒரு வழி இது….

உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகையில் 24 நிமிடங்கள், நாழிகைக்கு 360(15*24) மூச்சு எனச் சித்தர்கள் வகுத்துள்ளனைர். இதை வைத்தே வட்டத்தில் 360 பாகைகள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளைக்கு 21,600 மூச்சு ஓடுகிறது.  இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் உயிரும் மெய்யும் சேர்ந்து மொத்தம் 216 எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. 


ஒரு நாளைக்கு ஒரு மனிதன் 21,600 மூச்சு வீதம் செலவு செய்தால் 120 ஆண்டுகள் வரை உயிர் வாழலாம். உலகில் தன் கருத்தை வெளிப்படுத்த மட்டும் அல்லாமல் வாழும் ஆண்டுகளைக் கணக்கில் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரே மொழி நம் தமிழே…..!!!

தமிழ் என் தாய் மொழி என்பதால் தான் என்னவோ ஒவ்வொரு எழுத்தும் என் உயிராய் இருக்கிறது… இனி பெருமையுடன் சொல்வோம் ”தமிழ் என் மூச்சு” என்று…!!!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *