தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

புதன், 10 செப்டம்பர், 2014

மல்லர் கம்பம்

தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டு மல்லர் கம்பம் ஆகும். தரையில் ஊன்றிய கம்பத்தின் மீதும், கயிற்றில் தொங்கும் கம்பத்தின் மீதும், அந்தரத்தில் தொங்கும் கயிற்றின் மீதும் தாவி ஏறி ஆசனங்கள் செய்யும் மல்லர் கம்பம் வித்தையும் மிக அருகி வரும் கலைகளில் ஒன்றாகும்.

வீரம் செறிந்த விளையாட்டான மல்யுத்தம், சிலம்பம், களாரி, போன்று மல்லர் விளையாட்டிலும் நம் முன்னோர்கள் சிறப்பு பெற்ற கலைகள் ஆங்கிலேயர்களாலும் அன்னிய ஊடுருவலாலும் அழிக்கபட்டது போல் மல்லர் கம்பம் விளையாட்டும் நம்மில் இருந்து அழிக்கபட்டது.

மல்லர் கம்பம் யோகாசனம், தியானம் போன்று மனதையும் உடலையும் கட்டுபடுத்தி செய்யும் உடல் பயிற்சி ஆகும்.





சிலம்பத்துக்கும் மல்லர் விளையாட்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. சிலம்பத்தில் வீரன் நிலையாக நின்றிருப்பான் கம்புதான் சுற்று சுழலும். ஆனால் மல்லர் விளையாட்டில் கம்பம் நிலையாக இருக்க வீரன் அதன் மேல் சுற்றி சாகசம் புரிவான்.

மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களில் இந்த மல்லர் விளையாட்டு இன்றளவும் பிரபலமாக உள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட மாநில அரசுகள் இந்த மல்லர் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீகரித்துள்ளன. மகாராஷ்டிராவில் எந்த விழா தொடங்கப்பட்டாலும் இறைவணக்கத்துக்குப் பிறகு 5 நிமிடங்கள் மல்லர் பயிற்சி நடைபெறும்.

இதுபோல் பிரேசில், ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் மல்லர் விளையாட்டு பிரபலமடைய தொடங்கியுள்ளன.


விழுப்புரம் அருகே உள்ள வி.மருதூர் கிராமத்தை சேர்ந்த உலகதுரை என்ற உடற்பயிற்சி ஆசிரியர் மல்லர் விளையாட்டுப் பயிற்சியை முடித்தபின் மாணவர்களுக்கும், கிராமபுற இளைஞர்களுக்கும் இலவசமாக பயிற்சி அளித்தார். தமிழகம் முழுவதும்  200  மல்லர் விளையாட்டு வீரர்களே உள்ளனர்.





திராவிட, பார்பண ஆட்சிகளில் தமிழர் கலைகளும் தமிழர்களும் மதிக்கபடுவதில்லை . மனிதர்களுக்குப் பயன்படும் தமிழர் கூறிய நல்ல விடயங்களுக்கு எப்பொழுதும் அங்கீகாரம் கொடுப்பதும் இல்லை. இன்றும் இவ் அங்கிகாரம் நிலுவையில் இருக்கின்றது.

ஆங்கிலய ஆட்சியில் தமிழர்கள் தற்காப்புக் கலைகள் அழிக்கபட்டன. தற்காப்புக் கலை பயின்ற தமிழர்கள் சிந்தனைவாதிகளாகவும் அடிமைப்பட விரும்பாமல் இருந்ததே இதற்குக் காரணம். பிற்காலத்தில் திராவிட பார்பண ஆட்சியிலும் தமிழர் கலைகள் தமிழர் வரலாறு, தமிழர் வரலாற்று சின்னங்கள் என்பன அழிக்க பட்டன. இதற்கு இந்து எதிர்ப்பு என்று காரணம் சொல்ல பட்டது. 

தமிழ் சித்தர்கள் சொல்லிகொடுத்த யோகாசனம், தியானம் போன்றவற்றின் மகத்துவத்தை மேலைநாட்டவர்கள் உணரத் துவங்கிவிட்டனர். ஆனால் நாம் தான் நம் பாரம்பரியத்தை ஏனோ ஏற்கத் தயங்குகின்றோம்.

மல்லர் கம்பம்

2 கருத்துகள்:

  1. https://www.facebook.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-277303776319234/?modal=admin_todo_tour

    பதிலளிநீக்கு

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *