தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

எப்படி தூங்க வேண்டும் தெரியுமா…?

காலைமுதல் இரவு வரை வேலை செய்து ஓய்ந்தவர்களுக்குத் தெரியும் உறக்கத்தின் மகிமை… நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் முக்கியமான ஒன்று தூக்கம். இன்று நன்றாக தூங்கினால் தான் அடுத்த நாள் ஒழுங்காக வேலையில் கவனம் செலுத்த முடியும். நம் வாழ்நாளில் முக்கால் பங்கு நாம் தூங்குவதற்கு தான் செலவிடுகிறோம். அந்த உறக்கம் முழுமையானதாக இருக்க வேண்டும் அல்லவா…!

நம் உடம்பில் உள்ள கோடிக்கணக்கான செல்களைப் புதுப்பிக்கவும், உடல் சோர்வை நீக்கவும் உடல் வளர்ச்சி பெறவும் உறக்கம் அவசியம். தூங்குவதில் கூட உள்ள அறிவியல் உண்மைகளையும் நம் முன்னோர் விட்டு வைக்கவில்லை… எப்படி தூங்கவேண்டுமென ஒரு நூலையே வகுத்துள்ளனர். தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டுமே. ஏனெனில் இரவில் தான் குளிர்ச்சு பொருந்திய சூழல் நிலவுகிறது. இரவில் உறக்கம் இல்லாமல் போனால் ஏற்படும் விளவுகளை ஒரு பாடல் குறிப்பிடுகிறது.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்
விளக்கம்:
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுவது போல் இரவில் நித்திரையில்லாதவனையும் பற்பல நோய்கள் கவ்விக் கொள்ளும் என்பதாகும்.


எப்படி உறங்க வேண்டும்…???
உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு
1.    கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
2.    தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்
3.    மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும்
4.    வடக்குதிசையில் தலை வைத்து உறங்கக்கூடாது.
5.    மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.
6.    குப்புற படுத்தும் உறங்கக் கூடாது.
7.    இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். 8 அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் ஆயுள் வளரும்.

8.    வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். . இதனால் வலது மூக்கில் சுவாசம் சந்திரகலையில் ஓடும். 12 அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் உணவு செரிக்காமல் புளித்து விஷமாக நேரிடும்.

நாகரீக வளர்ச்சி, பொருள் ஈட்ட வேண்டும் என்ற வேகம் போன்றவற்றால் தூக்கத்தை இழந்து இரவில் வேலை செய்து கொண்டிருப்போர் இனிமேலாவது தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தால் நல்லது.... உணர்வார்களா....?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *