தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

வெற்றிலை போடுவது ஏன்?


 பெரும்பாலும் நம் வீட்டு விசேஷங்களில் எல்லாம் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் மகத்துவத்தை நாம் அறிய வேண்டாமா..?

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது. அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது. இந்த மூன்றுசத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.



பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும்.    தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை கட்டுப்படுத்தி ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.
ஆனால், வெற்றிலை, பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும்போது அது தீயப்பழக்கமாக மாறிவிடுகிறது. நம் முன்னோர்கள் வகுத்த தாம்பூலத்தில் புகையிலை சேர்க்கும் வழக்கம் கிடையாது.
இப்போது வயதானவர்களுக்கு ஏற்படும் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று எலும்பு முறிவு ஆகும்.  ஆனால் தாம்பூலம் போடுவதன் மூலம் ஓரளவு சுண்ணாம்புச் சத்து உடம்பில் சேர்வதால் எலும்புகள் வலுபெறுகின்றது.
தாம்பூலம் போட நம் முன்னோர்கள் வகுத்த நெறிமுறைகள் இவையே…

1.    காலை சிற்றுண்டிக்குப் பிறகு தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அது உடல் வெப்பத்தைக் கட்டுக்குள் வைக்கிறது.
2.    மதிய உணவிற்குபின் தாம்பூலம் உண்ணும் போது சுண்ணாம்பு அதிகாமாக சேர்த்துக்கொள்வதன் மூலம் பித்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.
                        3. இரவில் வெற்றிலையை அதிகம் சேர்த்துக்கொள்வதால் வாயு கட்டுபடுகிறது.                               நெஞ்சில் கபம் தங்காது.


n
     நம் முன்னோர்கள் நம் நன்மைக்காக வகுத்தவைகளை நாம் தவறாக பயன்படுத்தி நம் கலாச்சாரத்தைக் குறைக்கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது…?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *