தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

ஏனெனில் இது சுதந்திர நாடு….

ஆங்கிலேயனிடம் விடுதலைப் பெற்று ஆங்கிலத்திற்கு அடிமையாய் இருப்பார்கள்
ஏனெனில் இது சுதந்திர நாடு….
அரைகுறை ஆடை வாங்கி கலாச்சாரத்தை விற்றுக் கொண்டு இருப்பார்கள்
ஏனெனில் இது சுதந்திர நாடு….
சொத்திற்காக சொந்தங்களை வெட்டுவார்கள்…..
ஏனெனில் இது சுதந்திர நாடு….
கண்ட இடத்தில் குப்பைக் கொட்டுவார்கள்….
ஏனெனில் இது சுதந்திர நாடு….
விளைநிலத்தை விலை நிலமாக்குவார்கள்
ஏனெனில் இது சுதந்திர நாடு….
பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திற்கும் காசு பார்ப்பார்கள் 
ஏனெனில் இது சுதந்திர நாடு….
தோண்டிய குழியில் வீழ்ந்தவரைக் கண்டு கைகொட்டி சிரிப்பார்கள்
ஏனெனில் இது சுதந்திர நாடு….
வந்தோரையும் போனோரையும் புரளி பேசி காலத்தை கழிப்பார்கள்….
ஏனெனில் இது சுதந்திர நாடு….
குழந்தைகளையும் விட்டு வைக்காமல் நாசம் செய்வார்கள்
ஏனெனில் இது சுதந்திர நாடு….
விலைமதிப்பற்ற கல்வியையும் வியாபாரமாக்குவார்கள்
ஏனெனில் இது சுதந்திர நாடு….
இரவிலும் விழித்து அந்நிய நாட்டின்னுக்கு உழைப்ப்பார்கள்...
ஏனெனில் இது சுதந்திர நாடு….



இதுதான் சுதந்திரமா…?

விதியதை மாற்றி புதியன படைத்திட புறப்படுவோம் புது சரித்திரம் படைக்க…..

சுதந்திரம் எழுத்தில் அல்ல எண்ணத்தில்…
சுதந்திரம் ஏட்டில் அல்ல எழுச்சியில்
சுதந்திரம் பேச்சில் அல்ல மூச்சில்…
சுதந்திரம் ஊரில் அல்ல நம் உணர்ச்சியில்….

சுதந்திரத்தை சுதந்திரமாய் கொண்டாடுவோம்…..


அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *