தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

அருகம்புல்லின் மகிமை...

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல்  இதற்கு உள்ளது.

இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.. அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.


 அருகம்புல் சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்:


1. நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும்,சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
2.
ரத்த சோகை நீங்கி, ரத்தம் அதிகரிக்கும்.
3.
வயிற்றுப் புண் குணமாகும்.
4.
ரத்த அழுத்தம் குணமாகும்.
5.
நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
6.
சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
7.
நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
8.
மலச்சிக்கல் நீங்கும்.
9.
புற்று நோய்க்கு நல்ல மருந்து.
10.
உடல் இளைக்க உதவும்
11.
இரவில் நல்ல தூக்கம் வரும்.
12.
பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
13.
மூட்டு வலி நீங்கும்.
14.
கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
15.
நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

சுவையான ஆரோக்கியமான அருகம்புல் சாறு தயாரிப்பது எப்படி?

மருத்துவக் காரணங்கள் எனில் புல்லை நன்றாகக் கழுவி, வெறுமனே அரைத்து அப்படியே  குடிக்கலாம். சுவையுடன் வேண்டுமென்றால், அரைமூடி எலுமிச்சைச்சாறு கலந்து குடிக்கலாம். அல்லது கீழே கொடுக்கபட்டுள்ளபடி செய்து குடிக்கலாம்.

அருகம்புல் - அரை கப்
மிளகு - 2
சீரகம் - அரை டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
சர்க்கரை - அரை டீஸ் பூன்
எலுமிச்சைச்சாறு -  அரை கப் 
மேலே சொன்ன அனைத்தையும் ஒன்றாக அரைத்துக் குடிக்க சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *