தமிழா
ச்சீ…. என்று சொல்பவர்களுக்கும் தமிழில் பேசுபவர்களை ஏளனமாக பார்ப்பவர்களுக்கும் இந்த
இடுகை சமர்ப்பணம்….
பிரிட்டிஸ் இந்தியாவில் வெளியிடப்பட்ட
நாணயத்தாள்களில் தமிழ், கன்னட, தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி
எண்களுக்கும் முதன்மை இடம் கொடுக்கப்பட்டிருந்தது. ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10
தமிழில் ௧௦) இடம் பெற்றிருந்த்து. 1947
ற்குப் பின்னர் வெளியிடப்பட்ட தாள்களில்
இந்த மொழிகளுக்குரிய எண்கள் அச்சடிக்கப்படவி ல்லை
மொரீசியசு , சிங்கப்பூர், இந்தியா, இலங்கை ஆகிய நான்கு நாடுகளின் நாணயங்களில் தமிழ்
எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. உலகில் ஒரே ஒரு நாடு
மட்டுமே இப்பொழுதும் தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ - 0, ௧- 1,
௨- 2,௩- 3, ௪- 4,
௫- 5,
௬- 6,
௭- 7,
௮- 8,
௯- 9)
சீனப் பெருஞ்சுவரின் நுழைவாயிலில் "பாளையகாரர்கள்
நுழைவாயில்" என்று தமிழில் எழுதப்பட்டிருக்கும்.
சிந்துவெளியில்
உள்ள ஊர்களின் பெயர்கள் இன்றும் தமிழிலேயே உள்ளன.
கனடா பாராளுமன்றத்தில் தமிழ் மொழியில் பாராளுமன்றம் என்பது பொறிக்கப்பட்டிருக்கும்.
கனடா நாட்டில்
நல்வரவு என்று தமிழில் எழுதப்பட்டிக்கிறது.
ஜெர்மனி நாட்டில்
பேருந்தின் பெயர் தமிழிலும் எழுதப்பட்டிருக்கிறது.
உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில் தமிழ் மொழியில் நீர் வீழ்ச்சியின்
பெயர் இடம் பெற்றிருக்கும்.
சிங்கப்பூரில்
ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று. அங்கே வைக்கப்பட்டுள்ள அறிக்கை தமிழிலும் எழுதப்பட்டிருக்கிறது.
ரஷ்ய அதிபர் மாளிகையில் தமிழ் மொழியிலும் மாளிகையின் பெயர்
பொறிக்கப்பட்டிருக்கும்.
நார்வே நாட்டில்
ஒரு உணவகத்தின் பெயர் தமிழிலும் எழுதப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தில்
பயணச்சீட்டு தமிழிலும் வழங்கப்படுகிறது.
அமெரிக்க தூதரகம்
தமிழில் தன் பதிப்பினை வெளியிடுகிறது.
1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில் இந்தியாவிற்கு
சுதந்திரம் கொடுக்கலாமா என்ற விவாதத்தின் போது ஆங்கிலேய தளபதி இந்தியாவின் மிக
பெரிய சொத்தான திருக்குறளை நாம் எடுத்து வந்தாகி விட்டது. இனிமேல் அது வெறும் மண்தான். ஆகவே அது நமக்கு தேவை இல்லை என்று கூறினாராம்.
உலகில் பைபிளுக்கு அடுத்தப்படியாக அதிகமாக மொழிப் பெயர்க்கப்பட்ட நூல், "திருக்குறள்".
உலகில் தமிழனைத்தவிர பிறர் தமிழின் சிறப்பினை உணர்ந்துள்ளனர்
போலும்… நான் அறிந்த சிலவற்றினை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன். இன்னும் எத்தனை
நாடுகள் தமிழைகொண்டுள்ளனவோ…!!! தமிழா இனியேனும் உணர்வாயா..? தமிழ் உன் தாய் மொழி..
தமிழை இழந்தால் நாம் நம் அடையாளத்தை இழப்போம்…. தமிழ் மொழி அல்ல… நம் மூச்சு… பெருமைகொள்
”தமிழன்” என… இந்த பார் உன்னைப் போற்றும்….!!!
வாழ்க
தமிழ்!!!
வளர்க
தமிழின் பெருமை!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக