தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

மணல் மேல் ஒரு மலை.....

மணல் மேல் ஒரு வீடு கட்டினால் எத்தனை நாட்கள் நிலைக்கும்…? ஒரு நாள்…?ஒரு வாரம்…? ஒரு மாதம்…? அல்லது ஒரு வருடம்…? மணலின் மேல் கட்டப்பட்ட ஒரு கோவில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அசைக்க முடியாமல் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா…? அதுவும் அக்கோவில் ஒரு தமிழ் மன்னனால் கட்டப்பட்டது என்று சொன்னால்….. ஆச்சரியாமாக இருக்கிறது அல்லவா…? ஆம் நாம் அறிந்த தஞ்சை பெரியக்கோவில் ஒரு மணலின் மேல் கட்டப்பட்ட கோவில் ஆகும்… இது நாம் பெருமையோடு சொல்லிக்கொள்ளவேண்டிய ஒன்று…  எல்லா தொழில்நுட்ப வளர்ச்சியும் கொண்ட காலத்தில் கட்டப்பட்டவைகளை உலக அதிசயங்கள் என்று பார்த்து வியந்துகொண்டு இருக்கிறோம்…. ஆனால் நம் பாட்டன் கட்டியக் கோவில் எல்லா கட்டிடகலைக்கும் சவால் விட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை ஏனோ ஊதாசினப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்….


இராசராசேச்சுரத்தில் (தஞ்சைப் பெரிய கோயிலில்), ASI-ஆல் 350 அடிகளுக்கும் மேல் ஆழமாக போர்  போட்ட போது தான் ஒட்டுமொத்தக் கோவிலின் அடித்தளம் வெள்ளையான தூய மணலின் மேல் எழுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த வெள்ளை மணல் தூய்மையான சிலிகா ஆகும். இது ஆற்றங்கரை மணற்ப்படுக்கைப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் பொருளாகும். இதன் பின்னும் மாபெரும் அறிவியல் உண்மை இருக்கிறது. வெறும் இணைப்பு மற்றும் பூட்டுதல் முறைகளில் உருவாக்கப்பட்டுள்ள இக்கோவிலின் கட்டுமானம் பூமி அதிர்ச்சி, வெள்ள ஆபத்துக்கள் போன்ற இயற்கைப் பேரிடர்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு இந்த வெள்ளை மணலால் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழமன்னனால் (கி.பி.985-1014)கட்டப்பட்டது.

தஞ்சைபெரியகோவிலின் முழுமையான தோற்றம்

தஞ்சை பெரிய கோயிலின் சிறப்பு
1. கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட் டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பினார்.
2. இந்த பிரம்மாண்டமான கோயில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது
3. கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.


4. 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வது பிறந்தநாள் (சதய விழா) கொண்டாடப்பட்டது.
5.தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும்




தஞ்சை பெரியக் கோவிலுக்குச் சிறப்பு
தஞ்சை பெரியக்  கோவிலின் சிறப்பை உணர்த்த 1954ல் 1000 ரூபாய் தாளில் தஞ்சைகோபுரத்தின் படம் அச்சிடப்பட்டது.


மத்திய அரசு 1995ம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 5 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது  


தஞ்சை பெரியக்  கோவிலின் சதயவிழாவை முன்னிட்டு கோவிலின் உருவம் நாணயத்தில் பொறிக்கப்பட்ள்ளது.



கோவிலின் மதில் சுவர் முதல் கொண்டு எல்லாம் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தவை. எண்பதோரு வகையான ஆடல் கோலமும், கோவிலைப்பற்றிய கல்வெட்டுக்களும் நிரம்பி உள்ளன. இராஜராஜசோழன் காலத்தில் சமையலுக்காகக் கட்டப்பட்ட அறை இன்று வரையிலும் சமையலறையாகவே இருப்பது ஆச்சரியமே….!!!



இக்கோவில்புவியின் மையத்தை நோக்கிக் கட்டப்பட்டுள்ளதால் இதன்கோபுரத்தின் நிழல் தரையில் படுவதில்லை. கோவில் முழுவதும் அழகிய கல்வெட்டுக்கலாலும் சிற்பங்களாலும் வரைபடங்களாலும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் சிறப்பு கோவிலின் வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.


இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவிலைக்கட்டிய இராஜராஜசோழனின் உருவமும் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது.


இத்தனை சிறப்பாக ஒரு கோவிலைக்கட்டி நம்மை எல்லாம் பெருமைப்படவைத்த இராஜராஜசோழனின் கல்லறை கவனிப்பாரின்றி கிடக்கிறது. இது நாம் அனைவரும் வேதனைப்பட வேண்டிய ஒரு விடயமாகும். சதயவிழாவைக் கடந்து நிற்கும் ஒரு கோவிலைக் கட்டியவரின் கல்லறைக்கு கருணைக் கிடைக்குமா….???


இராஜராஜசோழனின் கல்லறை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *