தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

திங்கள், 1 செப்டம்பர், 2014

தமிழ்மொழி செம்மொழி.....

ஒரு மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் அதற்கு பதினொரு (11) தகுதிப்பாடுகள் இருக்க வேண்டும் என்று மொழியியல் வல்லுநர்கள் வரையறை செய்துள்ளனர். இந்தப் 11 தகுதிப்பாடுகளையும் உருவாக்கியவர்கள் மேலை நாட்டு மொழி அறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. சமற்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று.




ஆனால், என்ன ஒரு வியப்பு என்றால், நம் அன்னைத் தமிழுக்கு மட்டுமே செம்மொழித் தகுதிப்பாடுகள் பதினொன்றும் முழுமையாக உள்ளது. மேல்நாட்டு வல்லுநர்கள் வகுத்த மொழித் தகுதிப்பாட்டுக்கு நம்முடைய தமிழ்மொழி முற்றும் முழுவதுமாக ஒத்துப் போவது மிகப்பெரிய வரலாற்று உண்மையாகும்.

இனி, தமிழ்ச் செம்மொழிக்கு இருக்கின்ற அந்தப் 11 தகுதிகளைக் காண்போம்:-

1.தொன்மை (Antiquity)


2.தனித்தன்மை (Individuality)


3.பொதுமைப் பண்பு (Common Characters)


4.நடுவு நிலைமை (Neutrality)

5.தாய்மைத் தன்மை (Parental Kinship)

6.பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture art and life experiences of the civilized society)

7.பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை (Ability to function independently without any impact or influence of any other language and literature)

8.இலக்கிய வளம் (Literary prowess)

9.உயர்சிந்தனை (Noble ideas and ideals)

10.கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)


11.மொழிக் கோட்பாடு (Linguitik principles)




சங்ககாலப் பெண் புலவர்கள்...

பெரும்பாலும் ஓளவையாரைத் தவிர பிற பெண்பாற் புலவர்கள் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் சங்க காலத்தில் முப்பத்தி மூன்று பெண்பாற் புலவர் பெருமக்கள் இருந்துள்ளனர். அவர்களின் பெயர் பட்டியல் இதோ....

அள்ளூர் நன்முல்லையார்
ஆதி மந்தியார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஓரம் போகியார்
ஔவையார்
கச்சிப்பேட்டு நாகையார்
கழார்க்கீரன் எயிற்றியார்
காக்கைப் பாடினியார் நச்சோள்ளையார்
காவற்பெண்டு
காமக்கணி பசலையார்
குறமகள் இளவெயினியார்
குறமகள் குறிஎயினியார்.
குமிழி ஞாழலார் நப்பசலையார்
நக்கண்ணையார்
நன்னாகையார்
நெடும்பல்லியத்தை
பக்குடுக்கை நன்கணியார்
பூங்கண் உத்திரையார்
பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு
பெரெயில் முறுவலார்
பேயார்
பேய்மகள் இளவெயினியார்
பொதும்பில் புல்லாளங் கண்ணியார்
பொன்முடியார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மாரிப்பித்தியார்
மாறலோகத்து நப்பசலையார்
முள்ளியூர்ப் பூதியார்
வருமுலையாரித்தி
வெறியாடிய காமக் கண்ணியார்
வெள்ளி வீதியார்
வெண்ணிக் குயத்தியார்
வெண்மணிப் பூதியார்

புகைத்தலைப் பகைத்தால் வரும் நன்மைகள்...

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு ஆபத்தை விளைவித்து, அதற்கு அடிமையாக்கிவிடும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த பழக்கம் பல பேருடைய மன அழுத்தை நீக்க உதவுகிறது. இந்த பழக்கத்தை கைவிட நினைத்த பல பேர், இதற்கு மாற்று பொருளாக நிக்கோட்டின் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். வெகு சிலராலேயே இந்த பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்த முடிகிறது. சரி, இந்த பழக்கத்தை கைவிடுவதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.



சுவாசக் கோளாறுகள் நீங்கும் :-
9 மாதங்களில் அனைத்து சுவாசக் கோளாறுகளும் சரி ஆகும். மேலும் சுவாசப்பையின் கொள்ளளவு 10% அதிகரிக்கும்.

சுவை மற்றும் மனம் திரும்பும் :-
2 நாட்களில் உடம்பில் பரவியுள்ள நிக்கோட்டின் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் பொருட்களின் மீதான சுவை மற்றும் மனம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

இரத்த அழுத்தம் :-
புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதனால், உடலுக்கு உடனடி நன்மைகள் முதல் நீண்ட கால நன்மைகள் வரை பல கிடைக்கும். அதில் முதன்மையானது, அதிகமாக உள்ள இரத்த அழுத்தம் 20 நிமிடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

ஆக்ஸிஜன் சீராகும் :-
இரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு மெதுவாக குறைந்து, 8 மணி நேரத்தில் ஆக்ஸிஜன் அளவு சீராக மாறிவிடும்.

ஆக்கத்திறன் அதிகரிக்கும் :-
4 நாட்களில் உடலில் உள்ள மூச்சு குழாய்கள் அனைத்தும் அமைதியாகி, ஆக்கத் திறனை அதிகரிக்கும்.

செரிமான மாறுதல்கள் :-
புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால், அசிடிட்டி, செரிமானமின்மை மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். மேலும் வயிற்றுப் பொருமல், லேசான வயிற்று போக்கு, மலச்சிக்கல் மற்றும் குமட்டலும் ஏற்படும்.

மனநிலை மாறுதல் :-
இரத்த நாளங்கள் சம்பந்தமான தொகுப்புகளை சுருங்கச் செய்யும் தன்மையை கொண்டவை நிக்கோட்டின். அதனால் இதயம் இயல்பு நிலையை விட, அதிகமாக துடிக்க வேண்டியிருப்பதால், அது வலுவிழந்து போகும். மேலும் புகைப்பழக்கத்தை கைவிடுவதால், இப்போது இதயம் இயல்பு நிலைக்கு திரும்பும். அதனால் சோர்வு மற்றும் தலைச்சுற்று ஏற்படும்.



இரத்த ஓட்டம் சீராகும் :-
2 வாரங்களில் இரத்த ஓட்டம் முன்னேறி, அடுத்த 10 வாரங்களில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

இதய நோய் மற்றும் புற்றுநோய் வராமல் இருக்கும் :-
5 வருடங்களில் இதயமும், நுரையீரலும் புகைப்பிடிக்காதவரை போலவே இயங்கத் தொடங்கிவிடும். அதனால் நெஞ்சு வலி மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அபாயம் குறையும்.

இரத்த ஓட்டத்தில் மாறுதல்:-
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இனி இதயம் வேகமாக துடிக்க தேவையில்லை. இயல்பான இரத்த ஓட்டமாக மாறும் போது, விரல்களில் சிலிர்ப்பு, தலைச்சுற்று, தசை இறுக்கம் மற்றும் நீர் தேங்குதல் போன்ற பக்க விளைவுகளை உடம்பில் ஏற்படுத்தும்.

சுவாச மாறுதல் :-
தீய நஞ்சுத் தன்மையால் உடல் இனி மாசுபடாததால், சுவாச அமைப்பு மீண்டும் மீளவுயிர்ப்பிக்கும். இது சைனஸ், சளி, தொண்டை புகைச்சல் மற்றும் தொண்டை கட்டுதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.


தூக்க மாறுதல் :-
தூங்கும் முறையில் கூட மாற்றங்களை காணலாம். லேசாக கண் அயரும் நேரத்தில் கண் அசைவு இருந்து கொண்டே இருக்கும். மேலும் கெட்ட கனவுகளும் வந்து கொண்டே இருக்கும். மன அழுத்தத்தை நீக்கும் புகைப்பழக்கத்தை நீங்கள் கைவிடுவதால், பகலில் ஏற்படும் டென்ஷன் மற்றும் பிரச்சனைகளை இவ்வகை கனவுகள் தான் கையாளும். அதனால் சிறிது எரிச்சலும் கூட ஏற்படும்.

உயிரை காத்தல் :-
முடிவில், இதையெல்லாம் தாண்டி இந்த பழக்கத்தை கைவிட்டால், அது உங்கள் உயிரை காக்க போவது உறுதி. இந்த பழக்கத்தை கைவிட்டால், அந்த மாற்றத்தை உடல் ஏற்றுக்கொள்ள சிறிது காலம் பிடிக்கும்.



குழந்தைகளுக்கு எந்த தயாரிப்பை பயன்படுத்துகிறீர்கள்...?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அழகு சாதன பொருட்கள் அதிகம் வந்துவிட்டன. ஆனால் அவை தரமானது தானா…? என்று நாம் பார்த்து வாங்குகிறோமா…? அதுவும் குழந்தைகளுக்கு என் விற்பனை செய்யப்படும் பொருட்களில் நஞ்சு என்றால்…. அதிர்ச்சியான செய்தி என்றாலும் அது உண்மை தான். பெரும்பாலும் நாம் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பொருட்களில் அதிகம் பயன்படுத்துவது ஜான்சன் & ஜான்சன் கம்பெனியின் தயாரிப்புகளைத்தான். ஆனால் அவை குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் வீரியம் கொண்டவையாக உள்ளன என்றால் நம்ப முடிகிறதா….?

ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. 



ஆனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்மா, கேன்சர், போன்ற நோய்களையும் சில நேரங்களில் உடனே மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது. கேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த கம்பெனி சிறிய கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில் அச்சடிக்கப் பட்டுள்ளது. இதை குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள். இதை குழந்தைகள் தெரியாமல் குடித்து விட்டாலோ அல்லது சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாக்கும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். 



குழந்தைகளுக்கான தயாரிப்பு என்று சொல்லி விட்டு குழந்தைகளை தொடவேண்டாம் என்று சொல்வதில் இருந்து இதன் பயங்கர நச்சு தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.  இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சுத்திகரிக்கபடாத பெட்ரோல்களின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இதில் வேடிக்கை என்னவென்றால் Johnson & Johnson தயாரிப்புகளை உபயோகப்படுத்தி அதன் மூலம் வரும் அலர்ஜி மற்றும் நோய்களுக்கு இந்த நிறுவனமே மருந்துக்களையும் தயாரித்து விற்கிறது. அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரோடும் விளையாடுகிறார்கள். 

இது குறித்து உலக அளவில் இயங்கும் சுகாதார நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன. அண்டை மாநிலமும் உலக அளவிலும் எதிர்ப்பு இருக்கும் இந்த பொருட்கள் நம் மாநிலத்தின் மக்கள் நலத்துறைக்கும் உணவு தரக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே…


நண்பர்களே இதை படித்துவிட்டு உங்கள் உறவினர், நண்பர்கள் அண்டை வீடுகளில் குழந்தகள் இருந்தால் அவர்களின் பெற்றோர்களுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன்…!!!
குழந்தைகள் நம் நாளைய எதிர்காலம். அவர்களின் உயிரில் அலட்சியம் வேண்டாமே….


ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

சாப்பிட போறீங்களா...?

திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் கடைசியாக நாம் பாயாசம் என இனிப்பு வகை உணவுகளை சாப்பிடுகிறோம். ஆனால் இது தவறான  முறையாகும். இனிப்பு வகைகளையே முதலில் எடுக்க வேண்டும். நாம் சாப்பிடும் முன்பு பசி காரணமாக வாயு அதிகரித்து காணப்படும். அப்போது  நாம் இனிப்புகளை உண்பதால் அது வாயுவை தணித்து விடும். குறிப்பாக பழங்களை சாப்பிடும் முன்பே உண்பது நல்லது. நமது உடல் தேவையான  உணவை ஜீரணித்த பின்னர் எஞ்சிய உணவுகள் வயிற்றில் தங்கியிருக்கும். அப்போது பழங்கள் தங்கியிருந்தால் அவை அழுகி வேதியியல் மாற்றம்  காரணமாக இதர நோய்களை உருவாக்கும்.



தண்ணீர் குடிக்கும் முறை

சிலர் சாப்பிடும் முன்பு தண்ணீர் குடிப்பார்கள். சிலர் சாப்பிட்ட அரைமணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பார்கள். ஆனால் ஆயுர்வேத கூற்றுப்படி  சாப்பிடும்போது இடையிடையே அளவோடு தண்ணீர் அருந்த வேண்டும்.


பீடா

உணவருந்திய பின்னர் புகையிலை சேர்க்காமல், வெற்றிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து அதனை வாயில் மென்று சாரை விழுங்குவது  ஜீரணத்திற்கு நல்லது. பசுநெய் அளவோடு சேர்ப்பது மிகவும் நல்லது.



தூக்கம் வேண்டாம்

நாம் உணவு அருந்தியதுமே அனைத்து உடல் உறுப்புகளும் ஜீரணிப்பதில் ஈடுபடுவதால் சோர்வு ஏற்பட்டு தூக்கம் கண்களை தழுவும். ஆனால்  அவ்வாறு தூங்கினால் உடல் உறுப்புகள் ஜீரணம் செய்வதில் தடங்கல் ஏற்படும். எனவே உண்டவுடன் தூக்கத்தை தவிர்ப்பது நல்லது. மேலும் இரவு  உணவை படுப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே எடுக்க வேண்டும். கோடைக் காலத்தில் அக்னி (ஜீரணசக்தி) அதிகரிப்பதால் உண்டவுடன் சிறிது  நேரம் தூங்கலாம்.


“தெய்வம் சார்ந்த பராரை வேம்பு”

வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே தெய்வம் சார்ந்த பராரை வேம்புஎன்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது. இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. ஸ்டெப்டோமசீன் (Streptomycinie) போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.



லக்னோவிலுள்ள கிங் ஜார்ஜ் (King George) மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின் மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது.

வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.வேப்ப எண்ணெய்யை சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப் பெறலாம் என்கின்றனர்.எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து விட்டதை அறிந்தனர். சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று விடுவதையும் கண்டுள்ளனர்.

நிலத்தின் அமிலத் தன்மையை நிலைப்படுத்தும் தன்மையிலும், காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு தன்னிகரற்றது.வேப்பம் பூவிலிருந்து அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக் கட்டுப்படுத்துவதாக சித்திக் ஆலம் என்னும் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.சுற்றுச் சூழலை பாதுகாத்து நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது. காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும் நச்சு வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றனர்.

வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.
வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

வேறுபெயர்கள்

அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்திரம், பிசுமந்தம், வாதாளி.

வேப்பிலை
புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.
வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.
வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.
வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.



வேப்பம் பூ
பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.
வேப்பம் பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும்.
பூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல் பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.
வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.



வேப்பங்காயும் பழமும்
தோல் நோய் தீர்க்கும்.



வேப்ப விதை
மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.
விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.



வேப்ப நெய்
துஷ்ட புண்கள் தீரும்.

ஆராத இரணங்கள் தீரும்.

வேப்பம் பட்டை
வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.
வேப்பம் பட்டை கஷாயம் குட்டம் தீரும்.
100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.
வேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை செய்து 1 மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை உடையதாகும். விந்து கட்டும்



வேப்ப மர பிசின்
மேக நோயைப் போக்கும்.
வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து வளரும்.

அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தினால், மரபியல் குணங்களை நிர்ணயிக்கும் குரோமோசோம்கள் சிதைவுறுவதாக தற்கால ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. வேம்பு குரோமோசொம்களை பாதிக்காமல் நோய்க் கிருமிகளை மட்டும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.
நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி 10 நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *