தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

புதன், 3 செப்டம்பர், 2014

வரும் தலைமுறைக்கு வளமான சூழலைத் தருவோம்….!!!

நமக்கு தெரிந்த நீர் நிலைகளை எல்லாம் சொல்ல சொன்னால் நாம் என்னவெல்லாம் சொல்லுவோம்… கடல், ஆறு, ஏரி, குளம், குட்டை, கிணறு….. என் ஏறக்குறைய ஒரு பத்து சொல்லுவோமா…?

ஆனால் நமது சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் எத்தனை தெரியுமா…?  47

அவைகள் கீழ்வறுமாறு…:

அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
ஆறு (River) - பெருகி ஓடும் நதி.
இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.


ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.
ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
கடல் (Sea) - சமுத்திரம்.
கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
கால் (Channel) - நீரோடும் வழி.


கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.
குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.


கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.
தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.
வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்.

அந்த காலத்தில் நாற்பத்து ஏழு வகையான நீர் நிலைகள் இருந்து இருக்கின்றன. ஆனால் இப்போது ஆழ்துளை கிணறுகள் தான் பரவிக்கிடக்கின்றன. இன்னும் நாம் நீரை அசுத்தப்படுத்திக் கொண்டும், நீர் நிலைகள் இருந்த இடத்தை கட்டிடங்களாக மாற்றிக்கொண்டும் இருந்தால் எதிர் காலத்தில் தண்ணீர் என்பது படத்தில் கூட காண முடியாத ஒன்று ஆகிவிடும்.



தண்ணீர் நம் வாழ்வின் முக்கிய அங்கமாகும். நாகரீக வளர்ச்சி வசதி பெருக்கம் என்று இருக்கும் மரங்களையும் விளைநிலங்களயும் இழந்துக்கொண்டிருந்தால் எதிர் காலத்தில் தண்ணீர் கூட இராணுவ அனுமதியுடன் குடிக்க வேண்டிய நிலை வரும்… சிந்திப்போம்….! நம் நாளைய தலைமுறைக்காக தண்ணீரை சேமீப்போம்…!!!
நம் முன்னோர் நாம் வாழ பல நல்ல வழிகளை கையாண்டு நமக்கு சுத்தமான சுற்றுச் சூழலை ஏற்படுத்தி தந்தனர். ஆனால் நாம் அதை அசுத்தப்படுத்தி அழித்துக்கொண்டு இருக்கிறோம்.




நம் பாட்டன் ஆற்றில் கண்ட நீரை…
நம் தந்தை கிணற்றில் கண்ட நீரை….
நாம் தொட்டியில் காணும் நீரை….
நம் பிள்ளைகள் படத்தில் காணும் நிலையை தந்து விடக்கூடாது…



நன்னீரை சேமிப்போம்..!! 
சுற்றுச்சூழலைக் காப்போம்…!!! 
வரும் தலைமுறைக்கு வளமான சூழலைத் தருவோம்….!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *