1.
உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்கக் கூடாது..
விளக்கம்:
உடைந்த கண்ணாடியைப் பிடிக்கும் போது
கண்ணாடித் துகள்கள் சிதறவும் கைகளை காயப்
படுத்தவும் கூடும் என்பதால் தான் உடைந்த கண்ணாடியில் முகம்
பார்க்கக் கூடாது என்றனர்.
2.
விளக்கை வாயால் ஊதி அணைக்கக்கூடாது.
விளக்கம்:
வாயால் ஊதும்
போது
நெருப்புத் துகள்கள் தெரித்து அசம்பாவிதங்கள் நிகழக் கூடும் என்பதால் விளக்கைப் பூவினால் அணைக்க வேண்டும் என்றனர்.
3.
6 மணிக்கு மேல் வீடு பெருக்கக்கூடாது
விளக்கம்:
அந்தக் காலத்தில் மின்சாரம் இல்லை. 6
மணிக்கு மேல் சூரிய
வெளிச்சமும் இருக்காது. அப்போது வீடு பெருக்கும்போது எதிர்பாரா விதமாக விலையுயர்ந்த முக்கிய பொருட்களையும் பெருக்கிவிடக் கூடும் என்பதாலேயே விளக்கு வைத்தப் பின் வீடு
பெருக்கக் கூடாது என்றனர்.
4.
இறந்த வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்க வேண்டும்.
விளக்கம்:
ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ
கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும். சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள்
நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே தான் இந்த பழக்கம்.
5.
"அரைஞாண்" கட்டுவது
எதற்காக..?
விளக்கம்:
பலரும் அரைஞாண் கட்டுவது திருஷ்டிக்கு
என்று நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அது ஒரு மருத்துவ பலனைக் கொண்ட்து என்பது நம்மில்
பலருக்குத் தெரியாது.. அந்த அரைஞாண் கயிற்றின் பலன்கள் பல விதங்களில் உள்ளது.
அரைஞாண் என்பது கிராமத்தில் வசிப்பவர்களுக்கு அவசர கால உதவி ஆகும். வயல் வெளியில் விடம் கொண்ட பூச்சிகள், பாம்புகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். எதிர்பாராமல் தீண்டப்பட்ட போது கதிர் முற்றிய கழனியில் கயிறு கிடைப்பது அரிது. விடத்தின் கடிவாய்க்கும் இதயத்துக்கும் இடையே மருத்துவத்திற்குச் செல்லுமுன் தடைபோடும் உத்திக்கு அரைஞாண் கயிறு உற்ற தோழன். கையினால், விடம் உற்ற நேரம் அரைஞாண் கயிறு அறுத்தெடுக்கப்பட்டு முதல் உதவியாய் இறுக்கிக் கட்டப்படுவது வருமுன் காக்கும் உதவி.

ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாகும். ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன . இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக