தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

புதன், 17 செப்டம்பர், 2014

என் சமூகம் பகுதி – I - தமிழ் என் தாய் மொழி…


 தமிழில் பேசவும் எழுதவும் தயங்கும் தமிழர்களுக்காக ஒரு படைப்பு..

தமிழ் நெஞ்சங்களே! இன்று நாம் ஆங்கில மோகத்தில் இருக்கிறோம். ஆங்கிலம் பேசத்தெரிந்தவனே அறிஞன் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டோம்.. ஆனால் ஆங்கிலம் என்பது மொழி அறிவு. தமிழ் என்பது மொழிப் பற்று. மொழி அறிவிற்கும் மொழிப் பற்றிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. ஆங்கிலம் உலக மொழி என்பதால் அதன் அறிவு நமக்கு அவசியம். ஆனால் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தால் ஒருவன் அறிவாளி ஆகி விட முடியாது.

தாய் மொழி என்பது தாய்க்கு நிகரானது அல்லவா…! ஒருவரிடம் உன் தாயைப்பற்றி சொல்லச் சொன்னால் அய்யோ என் தாயைப் பற்றி எனக்கு தெரியாது அண்டை வீட்டாரின் தாயைப் பற்றி சொல்கிறேன் என்று சொல்வது போல் அல்லவா இருக்கிறது தமிழில் பேச தயங்குவோரின் எண்ணங்கள்…?

மாற்றான் தாயான ஆங்கிலத்தில் பேசுவதில் நாம் வெட்கப்படுவதில்லை. ஆங்கிலம் கற்பதில் மட்டும் அனைத்தும் முடிந்துவிடுவது இல்லை. ஒருவனின் முழுமையான அறிவு வளர்ச்சி என்பது வெறும் மொழி அறிவு சார்ந்தது மட்டும் அல்ல. அதனோடு அவனுடைய ஒழுக்கம், ஆளுமை, பண்பாடு ஆகியவற்றையும் பொருத்துத்தான் அமைகிறது. ஆங்கில நாட்டத்தால் பலர் தன் பேரப்பிள்ளைகளுடன் பேசும் சூழலை இழந்து இருக்கிறார்கள். சிறுவயது முதலே தமிழ் வார்த்தைகளை குழந்தைகள் கேட்காத அளவிற்கு ஆங்கிலத்தை புகட்டி விடுகிறோம்.. இதனால் ஏற்படும் பாதிப்புகளை சிந்திக்கிறோமா…?

சிறுபெட்டிக்கடை துவங்கி பெரிய அடுக்குமாடி கடைகள் அனைத்தின் பெயரும் ஆங்கிலத்தில்எங்கும் ஆங்கிலம்எதிலும் ஆங்கிலம்

தமிழில் பேசவும் எழுதவும் தெரியவில்லை எனில் அது பெருமை அல்ல. மிகப் பெரியத் தலைகுனிவு. பால்வாடி முதல் பட்டப்படிப்பு வரை அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்றால் அன்னைத்தமிழின் நிலை என்ன்வாகும்…? பல நல்ல நோக்குடன் நம் முன்னோர்கள் பார்த்து பார்த்து செதுக்கிய நம் மொழியை ஆங்கிலத்திற்காக இழக்க துணிந்து விட்டோம்.. இதுவும் ஒரு வகை கொலைத்தானே…? தன் அன்னையைப் பேணிக்காக்க இயலாத் தன்மையிலா நாம் இருக்கிறோம்…?

தமிழின் பெருமைகள் ஆங்கிலேயராலும் இன்னும் பலராலும் மறைக்கப்பட்டுள்ளது.  தமிழின் பெருமையை உணர்ந்த மேலை நாட்டு அறிஞர்கள் பலர் தமிழை ஆர்வமுடன் கற்று பல நூல்களை எழுதியும், தமிழின் பெருமைகளைத் தம் மக்களும் உணரும்படி அவற்றை மொழிபெயர்த்தும் உள்ளனர். அத்தகை உயர்ந்த மொழியை நாகரிகத்தின் பெயர் சொல்லி அழித்து கொண்டிருக்கிறோம்சுதந்திரமடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ஆங்கிலத்திற்கு அடிமைப்பட்டுக்கிடக்கிறோம்.

இனியும் தமிழன்னைக்கு இந்நிலை வேண்டாம்.. தமிழ் என்பது நம் அடையாளம். நம் அடையாளத்தை அன்னிய மொழிக்காக இழந்துவிட வேண்டாம்


இன்னும் இருளில் இருந்தால் தமிழன் என்ற ஒரு இனம் இருந்ததே மறைக்கப்படும் நிலை வந்துவிடும்.. விழித்துக் கொள் தமிழா…!!! தமிழே நம் தாய் மொழி…..


என் சமூகம்..

அன்பு நண்பர்களே...!

நம் சமூகம் மீதான அக்கரையையும் மனக் குமுறல்களையும் என் சமூகம் எனும் தலைப்பில் பகர இருக்கிறேன்... இதற்காக உங்கள்  ஒத்துழைப்பையும் கருத்துக்களயும் பகிருங்கள். வளமான சமூகத்தை நம் சந்ததிக்கு தருவது நமது கடமை அல்லவா...!!!!


நம் முன்னோரின் உணவுப் பழக்கங்கள்…

நாம் உணவைப் பற்றி பிறரிடம் கேட்க வேண்டுமெனில் ”சாப்பிட்டாயா?” என்பது மட்டுமே. ஆனால் நம் முன்னோர்கள் பன்னிரண்டு வகையான உண்ணும் முறைகளைக்கொண்டு இருந்திருக்கின்றனர். அவைகள் இவையே..

ü  தின்றல் -- பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.



ü  துய்த்தல் -- உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.

ü  நக்கல் -- நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.



ü  அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.

ü  உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது.

ü  உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.



ü  குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.



ü  பருகல் -- நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.

ü  மாந்தல் -- ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.



ü  கடித்தல் -- கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.



ü  விழுங்கல் -- வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.

ü  முழுங்கல் -- முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது.

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *