தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

ஞாயிறு, 29 மார்ச், 2015

தெரியுமா...?

*இந்தியாவில் தமிழில்தான் பைபிள் முதன் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது.
*ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
* உலகப் புகழ் பெற்ற ‘மோனோலிசா’ ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
* வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.
* எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
* உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 உள்ளன.
* தேசியக் கொடியை முதன் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க். 1291ல் உருவாக்கப்பட்டது.
* அமெரிக்காவைவிட சகாரா பாலைவனம் பெரிது.
* எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் உயிர் வாழும்.
* ஒரு பென்சிலைக் கொண்டு, 58 கி.மீ. நீளமான கோடு போடலாம்.
* பாம்புகளுக்கு கேட்கும் சக்தி இடையாது.
* நண்டிற்கு தலை கிடையாது. அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.
* வெள்ளை என்பது ஒரு நிறம் கிடையாது. அது 7 வண்ணங்களின் கலவை ஆகும்.
* முற்றிப் பழுத்துக் காய்ந்த தேங்காய், மரத்தில்ருந்து பகலில் விழாது. இரவில்தான் விழும்.
* நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும். நாய்க்கு நாக்கில் மட்டும்தான் வியர்க்கும்.
* சிலந்திப் பூச்சிக்கு 8 கண்கள் உண்டு.
* இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.
*ஆஃப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.


Image result for அப்படியா

நலம் தரும் நாவல்......

உடல் நலத்தை பாதுகாக்கும் நாவல் பழத்தின் சில மருத்துவ குணங்கள் :-
நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.
நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.
அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.
தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.
மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.
நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

Image result for நாவல்

இந்திய ரூபாய் நோட்டுகள் சொல்லும் வரலாறு

இந்திய ரூபாய் நோட்டுகள் சொல்லும் வரலாறு
**********************************************************************
இந்திய ரூபாய் நோட்டுக்களில் 1, 2, 5, 10, 20, 50, 100, 500 & 1000 என ஒவ்வொரு நோட்டிலும் ஒவ்வொரு புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு இந்திய வரலாற்றை பறைசாற்றுகின்றன.
ரூபாய் 1 & 1000 - இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு.
ரூபாய் 2 - விண்வெளியில் சாதனை
ரூபாய் 5 - விவசாயத்தின் பெருமை
ரூபாய் 10 - விலங்குகள் பாதுகாப்பு (புலி, யானை, காண்டாமிருகம்).
ரூபாய் 20 - கடற்கரை அழகு (கோவளம்)
ரூபாய் 50 - அரசியல் பெருமை (இந்திய நாடாளுமன்றம்)
ரூபாய் 100 - இயற்கையின் சிறப்பு (இமயமலை)
ரூபாய் 500 - சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை)


தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *