தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

வியாழன், 31 ஜூலை, 2014

தமிழ் எழுத்துக்கள்



காப்பியங்கள்...

ஐம்பெருங் காப்பியங்கள்

  • சிலப்பதிகாரம் 
  • மணிமேகலை 
  • சீவக சிந்தாமணி
  • வளையாபதி 
  • குண்டலகேசி

ஐஞ்சிறுகாப்பியங்கள்

  • உதயணகுமார காவியம் 
  • நாககுமார காவியம் 
  • யசோதர காவியம்
  • நீலகேசி 
  • சூளாமணி 

தினம் ஒரு குறள்

குறள்: 105, அதிகாரம்: இனியவைக் கூறல்

குறள்:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற



விளக்கம்:
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது


தமிழ் இலக்கிய வகைப்பாடு

டாக்டர்.மு.வரதராசனாரால் “தமிழ் இலக்கிய வரலாறு” என்னும் நூலில் வகைப்படுத்தப்பட்ட தமிழ் இலக்கிய வகைப்பாடு இதுவே...


செவ்வாய், 29 ஜூலை, 2014

பசி வந்திட பறந்து போகும் அந்த பத்து என்ன...?


மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர் உயர்ச்சி தாளாண்மை தேனின்
காசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்”


1. மானம் 
2. குலம் 
3. கல்வி 




4. வண்மை 

5. அறிவுடைமை

6. தானம் 


7. தவம்


8. உயர்ச்சி 

9. தாளாண்மை 

10. காமம்

ஞாயிறு, 27 ஜூலை, 2014

சிதம்பர ரகசியம்!


சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்...

1. இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World’s Magnetic Equator ).

2. பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

3. மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

4. விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

5. இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.


6. திருமந்திரத்தில் திருமூலர்

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்”. என்ற பொருளைக் குறிகின்றது.

7. “பொன்னம்பலம்சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை பஞ்சாட்சர படிஎன்று அழைக்கப்படுகின்றது, அதாவது சி,வா,,,என்ற ஐந்து எழுத்தே அது. கனகசபைபிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

8. பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

9. பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

10. சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.


வெள்ளி, 25 ஜூலை, 2014

நேரம் என்ன?

நம் முன்னோர்கள் காலத்தை வகுத்த விதம் பிரமிப்பானதுஅவர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.

  • வைகறை
  •  காலை
  •  நண்பகல்
  •  எற்பாடு
  •  மாலை
  •  யாமம்
என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன.

அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று அவர்கள் பண்டைக் காலத்திலேயே கணக்கிட்டு இருக்கிறார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது அவர்கள் கணக்கின்படி ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.
நம் முன்னோர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பது ஆச்சரியம் கலந்த உண்மையே...!


நோய்களை விரட்டும் மூலிகைப் பொடிகள்..


*
அருகம்புல் பொடி:- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*
நெல்லிக்காய் பொடி:- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*
கடுக்காய் பொடி:- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*
வில்வம் பொடி:- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*
அமுக்கலா பொடி:- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*
சிறுகுறிஞான் பொடி:- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*
நவால் பொடி:- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*
வல்லாரை பொடி:- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*
தூதுவளை பொடி:- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*
துளசி பொடி:- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*
ஆவரம்பூ பொடி:- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*
கண்டங்கத்திரி பொடி:- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*
ரோஜாபூ பொடி:- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*
ஓரிதழ் தாமரை பொடி:- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*
ஜாதிக்காய் பொடி:- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*
திப்பிலி பொடி:- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*
வெந்தய பொடி:- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*
நிலவாகை பொடி:- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*
நாயுருவி பொடி:- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*
கறிவேப்பிலை பொடி:- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*
வேப்பிலை பொடி:- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*
திரிபலா பொடி:- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*
அதிமதுரம் பொடி:- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*
துத்தி இலை பொடி:- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*
செம்பருத்திபூ பொடி:- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*
கரிசலாங்கண்ணி பொடி:- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*
சிறியாநங்கை பொடி:- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*
கீழாநெல்லி பொடி:- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*
முடக்கத்தான் பொடி:- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*
கோரைகிழங்கு பொடி:- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*
குப்பைமேனி பொடி:- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*
பொன்னாங்கண்ணி பொடி:- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*
முருஙகைவிதை பொடி:- ஆண்மை சக்தி கூடும்.
*
லவங்கபட்டை பொடி:- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*
வாதநாராயணன் பொடி:- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*
பாகற்காய் பொடி:- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி:- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*
மணத்தக்காளி பொடி:- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*
சித்தரத்தை பொடி:- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*
பொடுதலை பொடி:- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*
சுக்கு பொடி:- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*
ஆடாதொடை பொடி:- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*
கருஞ்சீரகப்பொடி:- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*
வெட்டி வேர் பொடி:- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*
வெள்ளருக்கு பொடி:- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*
நன்னாரி பொடி:- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*
நெருஞ்சில் பொடி:- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*
பிரசவ சாமான் பொடி:- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*
கஸ்தூரி மஞ்சள் பொடி:- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*
பூலாங்கிழங்கு பொடி:- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*
வசம்பு பொடி:- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*
சோற்று கற்றாலை பொடி:- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*
மருதாணி பொடி:- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*
கருவேலம்பட்டை பொடி:- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *